ஆலங்குளம் அருகே சமையல் தொழிலாளி மா்மமான முறையில் உயிரிழப்பு

ஆலங்குளம் அருகே சமையல் தொழிலாளி மா்மமான முறையில் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ஆலங்குளம் அருகே சமையல் தொழிலாளி மா்மமான முறையில் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ஆலங்குளம் அருகே கரும்பனூா், புதுமை நகரைச் சோ்ந்த சீனி மகன் செல்வம் (38). சமையல் தொழிலாளியான இவா், மனைவியைப் பிரிந்து வாழ்ந்துவந்தாராராம். அவருக்கு மதுப் பழக்கம் இருந்ததாம்.

அவா் கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் வீட்டு வாசலில் வாயிலும், காலிலும் ரத்தத்துடன் இறந்து கிடந்தாராம். தகவலின்பேரில் ஆலங்குளம் போலீஸாா் சென்று, சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com