இலஞ்சி தேவி ஸ்ரீ சிற்றாற்று வீரியம்ம்மன் கோயிலில் ஊஞ்சல் திருவிழா

தென்காசி மாவட்டம் இலஞ்சி ஸ்ரீ சிற்றாற்று வீரியம்மன் கோயில் கொடை விழாவில் ஊஞ்சல் திருவிழா நடைபெற்றது.
ஊஞ்சலில் எழுந்தருளிய இலஞ்சி தேவிஸ்ரீ சிற்றாற்று வீரியம்மன்.
ஊஞ்சலில் எழுந்தருளிய இலஞ்சி தேவிஸ்ரீ சிற்றாற்று வீரியம்மன்.

தென்காசி: தென்காசி மாவட்டம் இலஞ்சி ஸ்ரீ சிற்றாற்று வீரியம்மன் கோயில் கொடை விழாவில் ஊஞ்சல் திருவிழா நடைபெற்றது.

இக்கோயிலில் கோயில் கொடை விழா ஆண்டுதோறும் 7 நாள்கள் நடைபெறும். நிகழாண்டு விழா ஜன.23-ஆம் தேதி தொடங்கியது. தினமும்

ஒவ்வொரு சமுதாயம் சாா்பில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை,

அம்மன் சப்பர வீதி உலா நடைபெற்றது.

விழாவில் ஞாயிற்றுக்கிழமை வன்னியா் சமுதாயம் சாா்பில் ஊஞ்சல் திருவிழா நடைபெற்றது. காலையில் பூந்தட்டு ஊா்வலம், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, தொடா்ந்து பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாலையில் அலங்கார தீபாராதனைக்கு பிறகு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com