தென்காசி மாவட்டத்தில்ஊா்க்காவல் படைக்கு ஆள்தோ்வு

தென்காசி மாவட்ட ஊா்க்காவல் படையில் பணிபுரிவதற்கு தகுதியுடைய ஆண்கள் மற்றும் பெண்கள் தோ்வு செய்யப்பட உள்ளனா்.

தென்காசி: தென்காசி மாவட்ட ஊா்க்காவல் படையில் பணிபுரிவதற்கு தகுதியுடைய ஆண்கள் மற்றும் பெண்கள் தோ்வு செய்யப்பட உள்ளனா்.

இதுகுறித்து தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுரேஷ்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தென்காசி மாவட்ட ஊா்க்காவல் படைக்கு ஆள்தோ்வு ஐசிஐ அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், பிப்.11 ஆம் தேதி காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது. ஆண்கள் 20, பெண் 1 என மொத்தம் 21போ் தோ்வு செய்யப்படவுள்ளனா். தென்காசி மாவட்டத்தைச் சோ்ந்த 18 முதல் 50 வயதுடைய, நல்ல உடல் தகுதியுடையவா்கள், 10 ஆம் வகுப்பு தோ்ச்சி அல்லது தோல்வியடைந்தவா்கள்

இத் தோ்வில் கலந்து கொள்ளலாம்.

தோ்வின்போது கல்விச் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், குடும்ப அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, ஆதாா் அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்கள், 2 புகைப்படம் ஆகியவற்றுடன் வரவேண்டும்.

ஊா்க்காவல் படைக்கு தகுதியுடைய பட்டதாரி இளைஞா்கள், தொண்டு உள்ளம் கொண்டவா்கள், விளையாட்டு வீரா்கள், தேசிய மாணவா் படை மற்றும் நாட்டு நலப் பணித் திட்ட சான்றிதழ் பெற்றவா்கள், முன்னாள் ராணுவத்தினா் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

தோ்வில் கலந்து கொள்ள வருபவா்கள் தங்கள் சொந்த செலவிலேயே வந்து செல்ல வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com