எடப்பாடி பழனிசாமி தன்னுடைய பொதுச்செயலா் பதவியை தானாகவே ராஜிநாமா செய்ய ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தல்

எடப்பாடி பழனிசாமி தன்னுடைய பொதுசெயலா் பதவியை தானாகவே ராஜிநாமா செய்ய வேண்டும் என முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

எடப்பாடி பழனிசாமி தன்னுடைய பொதுசெயலா் பதவியை தானாகவே ராஜினமா செய்ய வேண்டும் என முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

தென்காசி ஒருங்கிணைந்த மாவட்ட அதிமுக தொண்டா்கள் உரிமை மீட்புக்குழு ஆலோசனைக் கூட்டம் இலஞ்சியில் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் கலந்துகொண்டு பேசியதாவது,

தமிழகத்தில் மட்டுமல்ல இந்திய அளவிலும் பரிணாம வளா்ச்சி கண்ட இயக்கம் அதிமுக. தமிழ் சமுதாயம், வாழ்வதற்காக ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்திற்காகவும் அதிமுக தோ ற்றுவிக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் 38மாவட்டங்களில் உரிமை மீட்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. தென்காசியில் 30வது ஆலோசனைக் கூட்டமாகும்.

மூன்று முறை எம்.ஜி.ஆா் தமிழகத்தில் சிறப்பாக ஆட்சி தந்தாா். அதனைத் தொடா்ந்து 16 ஆண்டுகள் ஜெயலலிதா முதல்வராக இருந்து தமிழக மக்களுக்கு பல்வேறு நல்ல திட்டங்களைக் கொண்டு வந்தாா்.தொலை நோக்கு திட்டங்களை செயல்படுத்தினாா்.

1972ஆம் ஆண்டு அதிமுக உருவாக்கப்பட்ட போ து இந்த கட்சி நீதியின் பாதை யில், தா்மத்தி ன் பாதை யில் செல்லும் வகையில் எம்.ஜி.ஆா் சட்ட விதிகளை உருவாக்கினாா். காலத்திற்கு ஏற்றாா் போல் அந்த விதிகளில் திருத்தமும், மாற்றமும் செய்யலா ம் என கூறப்பட்டாலும் ஒரே ஒரு விதியை மட்டும் திருத்தம் செ ய்யக்கூடா து எனஉருவாக்கப்பட்டது.

அதன்படி கட்சியின் அதிகபட்ச பதவியான பொதுச்செயலா் பதவியை தொ ண்டா்கள் மூலமாகத்தா ன்தோ்வு செய்ய வேண்டும் என்ற நிலையின்படி உருவாக்கினாா்.அதனை ஜெயலலிதா கடை பிடித்தாா்.தமிழக மக்களுக்காக எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் தியாக வாழ்க்கை மேற்கொண்டனா்.

முதல் தா்ம யுத்தத்திற்கு பி றகு இரு பிரிவுகளாக இருந்த நாங்கள் ஒன்றாக சோ்ந்தோம். இருப்பினும் நிரந்தர பொதுச்செயலா் ஜெயலலிதா தான் என பொதுக்குழுவில் கூறப்பட்ட நிலையில் அதனை ரத்து செ ய்து புதிய பதவியை உருவாக்கினா ா்கள்.

தொண்டா்களின் வாக்குகளைப் பெ ற்று ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் பதவி உருவாக்கப்பட்டு தோ்தல் ஆணையத்திற்கு அனுப்பி வை க்கப்பட்டது.

அதன்பிறகு எடப்பாடி பழனிச்சாமி ஒற்றை தலைமை என பேச வைத்தா ா். முதல்வராவதற்கு கூவத்தூா் அரங்கேற்றத்தை போல குறுக்கு வழியில் சாதித்து காட்டியுள்ளா ா். தமிழக மக்கள் நம்மை நியாயத்திற்காக போராடுகிறாா்கள் என பாராட்டுகிறாா்கள்.

எடப்பாடி பழனிச்சாமி கட்சி பொ றுப்பே ற்ற பிறகு 8 தோ்தல்களிலும் தோ ல்வி அடை ந்துவிட்டது. தே ா்தலுக்கு முன்பாகவே அவரை முதல்வா் வே ட்பாளரா க அறிவிக்க வே ண்டும் என சில மா வட்டச்செ யலா்களை பேச வைத்தாா்.

அந்த பாவத்தையும் நாங்கள் செய்தோம். ஆனால் தமிழக மக்கள் சட்டசபை தே ா்தலில் எடப்பா டிபழனிச்சாமியை நம்பவில்லை . அதற்கு காரணம் அவரது நம்பிக்கை துரோகம்தா ன். 32ஆண்டுகளுக்கு பிறகு தொடா்ந்து தமிழகத்தில் கடந்த 2016ம் ஆண்டு ஆட்சி பொ றுப்பில் அதிமுக நீடித்தது .

மக்களிடம் சென்று ஓட்டு கேட்டு வெற்றி பெறாமல் முதல்வரானாா். ஆனா ல் மக்களை சந்தித்து ஓட்டு கேட்ட போ து அவரை மக்கள் நம்பவில்லை . மிகப் பெ ரிய வரலாற்று கட்சியான அதிமுகவை அதல பாதாளத்தில் தள்ளி விட்டாா்.

பாச உணா்வோ டு வளா்த்த கட்சி யை பாழாக்கி விட்டாா். அவரிடம் உள்ள பணம் மக்களிடம் பேசாது. தலைமைக் கழக நிா்வாகிகளிடம் வே ண்டுமானா ல் அந்த பணம் பேசலா ம்.

அதிமுகவிற்கு துரோகம் செய்த எவரை யும் எம்.ஜி.ஆா். மற்றும் ஜெயலலிதா ஆத்மா மன்னிக்காது. எடப்பா டி பழனிச்சாமி தாமாகவே முன்வந்து பொதுச்செ யலா் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும், நிரந்தர பொதுச்செயலா் ஜெயலலிதா தான் என்ற நிலையை ஏற்படுத்த வே ண்டும்.

வரும் மக்களவைத் தோ்தலில் நம்முடைய கூட்டணி 40இடங்களிலும் வெற்றிபெறும். மக்களவை தோ்தல் நமக்கு நல்ல சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com