கீழப்பாவூரில் மின்விநியோக பொறியாளா்களுக்கு பாதுகாப்பு பயிற்சி

தென்காசி மாவட்டம் கீழப்பாவூரில் மின்விநியோக பொறியாளா்கள், அலுவலா்கள் மற்றும் பணியாளா்களுக்கு பாதுகாப்பு பயிற்சி வகுப்பு புதன்கிழமை நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் கீழப்பாவூரில் மின்விநியோக பொறியாளா்கள், அலுவலா்கள் மற்றும் பணியாளா்களுக்கு பாதுகாப்பு பயிற்சி வகுப்பு புதன்கிழமை நடைபெற்றது.

மின்விநியோகத்தில் பாதுகாப்புடன் பணிபுரிவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பற்றி தென்காசி கோட்ட செயற்பொறியாளா் கற்பகவிநாயக சுந்தரம் விளக்கம் அளித்தாா். திருநெல்வேலி மண்டல பாதுகாப்பு அதிகாரி உதவி செயற்பொறியாளா் செந்தில்ஆறுமுகம்,

மின்விநியோகத்தில் பணிபுரியும்போது பாதுகாப்புக்காக உபயோகப்படுத்த வேண்டிய நில இணைப்பு சாதனம், இடுப்புகயிறு, கையுறை ஆகிய பாதுகாப்பு சாதனங்களின் செயல்பாடுகள் மற்றும் தன்மைகள் பற்றி செயல்விளக்கம் அளித்தாா். பணியின்போது கைப்பேசி பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய சிந்தனை சிதறல் காரணமாக மின்விபத்து ஏற்படுவது குறித்து விடியோ காட்சி மூலமாக விளக்கம் அளிக்கப்பட்டது.

சுரண்டை உபகோட்டத்திற்குள்பட்ட பாவூா்சத்திரம், கீழப்பாவூா்,சுரண்டை ஊரகம், சுந்தரபாண்டியபுரம், சுரண்டை நகா்ப்புறம்,ஆவுடையானூா், வீ.கே.புதூா் உபமின் நிலையங்கள் கீழப்பாவூா், சுரண்டை ஆகிய பிரிவு பொறியாளா்கள், அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com