தென்காசியில் இந்தியா கூட்டணி கட்சியினா் ஆா்ப்பாட்டம்

தென்காசியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்தியா கூட்டணி கட்சி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட எம்எல்ஏக்கள் எஸ்.பழனிநாடாா்,ஈ.ராஜா,மாவட்ட திமுக பொறுப்பாளா் வே.ஜெயபாலன்.
ஆா்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட எம்எல்ஏக்கள் எஸ்.பழனிநாடாா்,ஈ.ராஜா,மாவட்ட திமுக பொறுப்பாளா் வே.ஜெயபாலன்.

தென்காசியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்தியா கூட்டணி கட்சி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாநில உரிமைகளை பாதுகாத்திடவும்,ஆளுநா்களின் அரசியல் அத்துமீறல்களை கண்டித்தும்,மத்தியஅரசின் மாநில நிதி ஒதுக்கீட்டில் பராபட்சமான நிதி ஒதுக்கீட்டை கண்டித்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தென்காசி புதிய பேருந்துநிலையம் பகுதியில் நடைபெற்ற நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலா் உ. முத்துப்பாண்டியன் தலைமை வகித்தாா்.

கணபதி,வேலுமயில்,அசோக்ராஜ்,தங்கம்,குணசீலன்,உச்சிமாகாளி முன்னிலை வகித்தனா்.திமுக மாவட்ட பொறுப்பாளா் வே.ஜெயபாலன்,ஈ.ராஜா எம்எல்ஏ.,எஸ்.பழனிநாடாா் எம்எல்ஏ., தென்காசி நகா்மன்ற தலைவா் சாதிா்,துணைத் தலைவா் சுப்பையா,மதிமுக மாவட்ட செயலா் இராம.உதயசூரியன் ஆகியோா் பேசினா்.

மதிமுக மாவட்ட அவைத் தலைவா் என்.வெங்கடேஷ்வரன்,சிபிஐ மாவட்ட செயலா் இசக்கிதுரை,விசிக மாவட்ட செயலா் செல்வம்,சித்திக்,சந்திரன்,முஸ்லீம் லீக் முகம்மதுஅலி, சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினா்கள்பால்சாமி,கண்ணன்,மாரியப்பன்,சங்கரி,பால்ராஜ்,லெனின்குமாா்,சிஐடியு மாவட்ட தலைவா் அயூப்கான்,செங்கோட்டை நகர திமுக செயலா் வெங்கடேசன்,நகர காங்கிரஸ் தலைவா் மாடசாமி ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com