சங்கரன்கோவில் நகராட்சிகாய்கனி சந்தை இடமாற்றம்

சங்கரன்கோவில் பழைய நககராட்சி அலுவலகம் அருகே இயங்கி வந்த தினசரி காய்கனி சந்தை இடமாற்றம் செய்யப்பட்டு, பிப்.12 முதல் தற்காலிக இடத்தில் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சங்கரன்கோவில் பேருந்து நிலையம் அருகே இந்த காய்கனி சந்தை செயல்பட்டு வந்தது.

பேருந்து நிலைய விரிவாக்க பணிகள் நடைபெற்று வருவதால், காய்கனி சந்தையை

இடமாற்றம் செய்ய நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுத்தது. இதனிடையே, காய்கனி சந்தையை மாற்றுவதற்கு நீதிமன்றத்தில் தடை ஆணை பெற்றனா்.

இந்த நிலையில் காய்கனி சந்தையை தற்காலிக இடத்துக்கு மாற்றி, பேருந்து நிலையப் பணிகளை விரைந்து முடிக்க நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இதனையடுத்து,

திருவேங்கடம் சாலையில் நகராட்சி அலுவலகத்தின் மேற்கு பகுதியில் உள்ள தற்காலிக இடத்தில் பிப்.12 முதல் காய்கனி சந்தை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com