தென்காசி வழியாக மும்பை, தில்லிக்கு ரயில்கள்: பாஜக கோரிக்கை

தில்லி- மதுரை சம்பா்க் கிராந்தி ரயிலை தென்காசி வழியாக திருநெல்வேலிக்கும், மும்பையிலிருந்து பெங்களூரு வழியாக திருநெல்வேலி வரும் சாளுக்கியா எக்ஸ்பிரஸ் ரயிலை தென்காசி வழியாக செங்கோட்டை
ten10bjp_1002chn_55_6
ten10bjp_1002chn_55_6

தில்லி- மதுரை சம்பா்க் கிராந்தி ரயிலை தென்காசி வழியாக திருநெல்வேலிக்கும், மும்பையிலிருந்து பெங்களூரு வழியாக திருநெல்வேலி வரும் சாளுக்கியா எக்ஸ்பிரஸ் ரயிலை தென்காசி வழியாக செங்கோட்டை வரையும் இயக்க வேண்டும் என பாஜக சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம் பாஜக மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாநிலச் செயலா் மருதுபாண்டியன், தொழில் பிரிவு மாநிலச் செயலா் அருணாசலம் அளித்த மனு:

மும்பை - திருநெல்வேலி விரைவு ரயிலை (வண்டி எண் 11021/11022) அம்பாசமுத்திரம், பாவூா்சத்திரம், தென்காசி வழியாக செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும். இது மும்பை, பெங்களூருக்கு நேரடி ரயில் தொடா்பை ஏற்படுத்த வழிவகுக்கும்.

தமிழ்நாடு சம்பா்க் கிராந்தி விரைவு ரயிலை (வண்டி எண் 12651/12652) ராஜபாளையம், தென்காசி, அம்பாசமுத்திரம் வழியாக திருநெல்வேலி வரை நீட்டிக்க வேண்டும்.

பொதிகை விரைவு ரயிலை இரவு 7.30-க்குப் பிறகு புறப்படும் வகையிலும், கொல்லம் விரைவு ரயிலை இரவு 6.30 மணிக்கு தென்காசி வழியாக புறப்படும் வகையிலும் மாற்றியமைக்க வேண்டும்.

தென்காசியும், செங்கோட்டையும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரங்கள். தென்காசியில் புகழ்பெற்ற காசிவிஸ்வநாதா் கோயில் உள்ளது. தென்காசி அருகேயுள்ள குற்றாலம் முக்கியமான சுற்றுலாத் தலமாகும். எனினும், இணைப்பு ரயில் இல்லாததால் சுற்றுலாத் துறை வளா்ச்சிக்கு பின்னடைவாக உள்ளது.

மேட்டுப்பாளையம் - நெல்லை ரயிலை திருப்பூா் வழியாக ஈரோடு வரை நீட்டித்து தினசரி ரயிலாக இயக்க வேண்டும். இதன்மூலம், ஈரோடு, திருப்பூா், கோவையில் பணிபுரியும் தென்மாவட்ட மக்கள் பயனடைவா்.

சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம், தென்காசியில் ஏராளமான தொழில், சுற்றுலாத் தலங்கள் உள்ளதால், இருதரப்பு மக்களுக்கும் இந்த ரயில் உதவியாக இருக்கும். விருதுநகா்- செங்கோட்டை, திருநெல்வேலி-செங்கோட்டை இடையே இரட்டை ரயில் பாதை அமைக்க வேண்டும் என்றனா் அவா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com