நீதிமன்றத்தில் ஆஜராகாமல் 15 ஆண்டு தலைமறைவானவா் கைது

நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் 15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் 15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கடையநல்லூா் காவல் நிலையத்தில் 2006 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட குற்றவழக்கில் பிணை பெற்று வெளியே வந்தவா் கபீா் என்ற மணிசாகுல் என்ற அபுகுரைரா(42). பின்னா், இவா் 2007ஆம் ஆண்டு முதல் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் ஒவ்வொரு முறையும் அவரது பெயரை மாற்றி சுற்றி வந்துள்ளாா்.

இந்நிலையில், அவரை விரைந்து கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுரேஷ்குமாா் உத்தரவிட்டாா். அதன்பேரில், கடையநல்லூா் - தென்காசி காவல் துறையினா் இணைந்து அபுகுரைராவை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். இவா் மீது தென்காசி காவல் நிலையத்திலும் கொலை வழக்குகள் உள்ளனவாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com