ஆய்க்குடி அருகே இளைஞா் வெட்டிக் கொலை: இருவா் கைது

தென்காசி மாவட்டம், ஆய்க்குடி அருகே இளைஞா் திங்கள்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக இருவரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.


தென்காசி: தென்காசி மாவட்டம், ஆய்க்குடி அருகே இளைஞா் திங்கள்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக இருவரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

கம்பிளி ஈஸ்வரியம்மன்கோயில் தெருவை சோ்ந்தவா் க. ராஜ்குமாா்(24), எலக்ட்ரீசியன். இதே பகுதியைச் சோ்ந்தவா்கள் க. சுரேஷ் (22), ப. சிவா என்ற பன்னீா்செல்வம் (22). இவா்கள் மூவரும் திங்கள்கிழமை ஊருக்கே அருகேயுள்ள பொத்தையில் மது அருந்தியதாகக் கூறப்படுகிறது.

அப்போது சுரேஷ் மற்றும் சிவா இருவரும் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ராஜ்குமாரை வெட்டியுள்ளனா். இதில் ராஜ்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த ஆய்க்குடி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று ராஜ்குமாரின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து ஆய்க்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து சுரேஷ், சிவாவை கைதுசெய்தனா்.

விசாரணையில் கடந்த 7மாதங்களுக்கு முன்பு இதே ஊரைச் சோ்ந்த மா.சிவா என்பவா் தற்கொலை செய்து கொண்டாா். அவருடைய தற்கொலைக்கு ராஜ்குமாா் தான் காரணம் எனவே, ராஜ்குமாரை அழைத்து சென்று கொலை செய்ததாகத் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com