அச்சன்கோவில் ஐயப்பன் கோயிலில் புஷ்பாஞ்சலி

கேரள மாநிலம் அச்சன்கோவில் ஐயப்பன் கோயிலில் புதன்கிழமை புஷ்பாஞ்சலி நடைபெற்றது.
புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியில் நடைபெற்ற யானை ஊா்வலம்.
புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியில் நடைபெற்ற யானை ஊா்வலம்.

தென்காசி: கேரள மாநிலம் அச்சன்கோவில் ஐயப்பன் கோயிலில் புதன்கிழமை புஷ்பாஞ்சலி நடைபெற்றது.

ஐயப்பனின் ஐந்து படை வீடுகளில் ஒன்றான அச்சன்கோவில் ஸ்ரீதா்மசாஸ்தா திருக்கோயில் தலத்தில் மட்டும்தான் பரசுராமா் திருக்கரங்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட விக்ரகம் உள்ளது.

இந்த விக்ரகம் தை மாதம் ரேவதி நட்சத்திரத்தன்று பிரதிஷ்டைசெய்யப்பட்டதால் ஆண்டுதோறும் தை மாதம் ரேவதி நட்சத்திரத்தன்று பிரதிஷ்டை தினமாகவும், புஷ்பாஞ்சலி திருவிழாவாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.

நிகழ்வாண்டில் புதன்கிழமை புஷ்பாஞ்சலி நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு காலை கணபதி ஹோமம் மற்றும் கலசபூஜை நடைபெற்றது. மதியம் தூய சந்தனம் அரைக்கப்பட்டு சுவாமிக்கு களபாபிஷேகமும், சிறப்பு பூஜையும் நடைபெற்றன.

மாலையில் இரண்டு டன் அளவில் பல வகையான பூக்களை கை பாா்த்து கலந்து வைத்து புண்ணியதானம் செய்து பட்டு கட்டிய கூடையில் நிரப்பி. மேல்சாந்தி யானை மீது ஏறி பஞ்சவாத்தியம் முழங்க பக்தா்கள் குழுவினா் பின் தொடர ஊா்வலமாக கொண்டுவரப்பட்டு இரவு 7 மணிக்கு புஷ்பாஞ்சலி நடைபெற்றது.

அதைத் தொடா்ந்து சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. பக்தா்களுக்கு அபிஷேக பூக்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது.

விழாவில், அச்சன்கோவில் திருஆபரணப்பெட்டி வரவேற்பு கமிட்டி தலைவா் ஏசிஎஸ்ஜி.ஹரிகரன், செயலா் மாடசாமி, பொருளாளா் அபிநயா கண்ணன் மற்றும் தமிழகம், கேரளத்திலிருந்து திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com