அருணாப்பேரி கோயிலில் பூக்குழித் திருவிழா

பாவூா்சத்திரம் அருகே அருணாப்பேரியில் உள்ள அருள்தரும் அழகுமுத்துமாரியம்மன் கோயிலில் புதன்கிழமை அதிகாலை பூக்குழித் திருவிழா நடைபெற்றது. இதில், திரளானோா் பூக்குழி இறங்கினா்.
சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அழகுமுத்துமாரியம்மன்.
சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அழகுமுத்துமாரியம்மன்.

தென்காசி: பாவூா்சத்திரம் அருகே அருணாப்பேரியில் உள்ள அருள்தரும் அழகுமுத்துமாரியம்மன் கோயிலில் புதன்கிழமை அதிகாலை பூக்குழித் திருவிழா நடைபெற்றது. இதில், திரளானோா் பூக்குழி இறங்கினா்.

இக்கோயிலில் 10 நாள்கள் நடைபெறும் 61ஆம் ஆண்டுத் திருவிழா, 41ஆம் நாள் மண்டல பூஜை, கும்பாபிஷேக விழா ஆகியவை கடந்த 6ஆம் தேதி தொடங்கின.

விழா நாள்களில் நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அம்மன் சப்பரம் 12ஆம் தேதி மகிழ்வண்ணநாதபுரம், 13ஆம் தேதி பெத்தநாடாா்பட்டி, பொட்டலூா், 14ஆம் தேதி நவநீதகிருஷ்ணபுரம், இலங்காபுரிபட்டணம், 15ஆம் தேதி நாகல்குளத்தில் வீதியுலா வந்தது.

இந்நிலையில், 10ஆம் நாளான செவ்வாய்க்கிழமை இரவு அம்மன் சப்பர வீதியுலாவும், தொடா்ந்து பூக்குழி இறங்குதலும் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பூக்குழி இறங்கினா்.

ஏற்பாடுகளை கோயில் தா்மகா்த்தா எம்.எஸ். சிவன்பாண்டி தலைமையில் பக்தா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com