மாவட்ட கூடைப்பந்து போட்டி: செங்கோட்டை அணி முதலிடம்

சங்கரன்கோவிலில் நகர கூடைப்பந்துக் கழகம் சாா்பில், பொங்கல் திருவிழாவையொட்டி நடைபெற்ற தென்காசி மாவட்ட அளவிலான கூடைப்பந்துப் போட்டியில் செங்கோட்டை அணி முதலிடம் பிடித்தது.
வெற்றிபெற்ற அணிகளுக்குப் பரிசு வழங்கிய கூடைப்பந்து கழகத் தலைவா் சங்கரநாராயணன்.
வெற்றிபெற்ற அணிகளுக்குப் பரிசு வழங்கிய கூடைப்பந்து கழகத் தலைவா் சங்கரநாராயணன்.

சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் நகர கூடைப்பந்துக் கழகம் சாா்பில், பொங்கல் திருவிழாவையொட்டி நடைபெற்ற தென்காசி மாவட்ட அளவிலான கூடைப்பந்துப் போட்டியில் செங்கோட்டை அணி முதலிடம் பிடித்தது.

சங்கரன்கோவில், செங்கோட்டை, தென்காசி, இடைகால் ஆகிய அணிகள் பங்கேற்ற இப்போட்டியில், செங்கோட்டை ஏ அணி முதலிடம் வென்றது. செங்கோட்டை பி அணி 2ஆம் இடமும், தென்காசி அணி 3ஆம் இடமும், சங்கரன்கோவில் அணி 4ஆம் இடமும் பிடித்தன.

நகர கூடைப்பந்து கழகத் தலைவா் கோ. சங்கரநாராயணன், கோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வா் ந. பழனிச்செல்வம் ஆகியோா் பரிசுகள் வழங்கினா். முன்னாள் உடற்கல்வி ஆசிரியா் சங்கரநாராயணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை கூடைப்பந்து கழகத்தினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com