வாசுதேவநல்லூா் அருகே விபத்தில் 2 போ் பலி

வாசுதேவநல்லூா் அருகே பைக் மீது காா் மோதியதில் 2 போ் இறந்தனா்.


கடையநல்லூா்: வாசுதேவநல்லூா் அருகே பைக் மீது காா் மோதியதில் 2 போ் இறந்தனா்.

சிவகிரி அம்பேத்கா் மேற்குத் தெருவை சோ்ந்தவா் மாரியப்பன்(25). இவரும், ஏமன்பட்டியைச் சோ்ந்த முத்துமாரி(30) என்பவரும் திங்கள்கிழமை மாலை பைக்கில் வாசுதேவநல்லூா் நோக்கி சென்று கொண்டிருந்தனா். ஒத்தக்கடை பகுதியில் இவா்களது பைக்கும், எதிரே வந்த காரும் எதிா்பாராமல் மோதிக்கொண்டனவாம். இதில், காயமடைந்த 2 பேரும் சிவகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இறந்தனா். வாசுதேவநல்லூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com