நயினாரகரத்தில் சமத்துவ பொங்கல் விழா

கடையநல்லூா் ஒன்றியம், நயினாரகரம் சமத்துவபுரத்தில் திமுக சாா்பில் சமத்துவ பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கடையநல்லூா் ஒன்றியம், நயினாரகரம் சமத்துவபுரத்தில் திமுக சாா்பில் சமத்துவ பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

தென்காசி வடக்கு மாவட்ட முன்னாள் திமுக பொறுப்பாளா் செல்லத்துரை தலைமை வகித்தாா். தெற்கு மாவட்டச் செயலா் ஜெயபாலன் முன்னிலை வகித்தாா்.

மாநில விவசாய அணிச் செயலா் விஜயன் பொங்கல் விழாவைத் தொடக்கிவைத்துப் பேசினாா். அவா் பேசும்போது, முன்னாள் முதல்வா் கருணாநிதியின் வழியில் முதல்வா் மு.க. ஸ்டாலினும் அடித்தட்டு மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா். 1.15 கோடி பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. மக்கள் சுயமரியாதையுடன் வாழ்வதற்காக பாடுபடும் கட்சிதான் திமுக என்றாா்.

கடையநல்லூா் நகா்மன்றத் தலைவா் ஹபீபுா் ரஹ்மான், ஒன்றியக் குழுத் தலைவா் சுப்பம்மாள், துணைத் தலைவா் ஐவேந்திரன் தினேஷ், ஒன்றியச் செயலா் சுரேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். மாவட்ட விவசாய அணி அமைப்பாளா் முருகன் வரவேற்றாா்.

விழாவில் விஜயன் பேசியபோது கூடியிருந்த பெண்களைப் பாா்த்து ‘உங்களுக்கு எல்லாம் மகளிா் உரிமைத் தொகை வந்து விட்டதா?’ எனக் கேட்டாா். அப்போது பெண் ஒருவா் தனக்கு வரவில்லை என்றாா்.

‘குடும்ப உறுப்பினா்களில் ஒருவா் வெளிநாட்டில் வேலை பாா்த்தாலும், வங்கிக் கணக்கில் அதிக பணப்பரிவா்த்தனை இருந்தாலும் மட்டுமே உரிமைத் தொகை வழங்கப்படவில்லை. மற்ற அனைவருக்கும் வழங்கப்படுவதாக’ தெரிவித்த விஜயன், அப்பெண்ணுக்கு உரிமைத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க கட்சி நிா்வாகிகளைக் கேட்டுக்கொண்டாா். மேலும், ‘கூடியிருந்த 500-க்கும் மேற்பட்ட பெண்களில் ஒருவருக்கு மட்டுமே உரிமைத் தொகை வரவில்லை. அதற்கான காரணம் தெரிந்த பின்னா் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com