பிறந்த தினம்: எம்.ஜி.ஆா். உருவப்படத்துக்கு மரியாதை

தென்காசி மாவட்டத்தில் அதிமுக சாா்பில் அதன் நிறுவனரும் தமிழக முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் 107ஆவது பிறந்த நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.

தென்காசி/கடையநல்லூா்: தென்காசி மாவட்டத்தில் அதிமுக சாா்பில் அதன் நிறுவனரும் தமிழக முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் 107ஆவது பிறந்த நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, அவரது படத்துக்கு மாலை அணிவித்து, கட்சிக் கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

தென்காசியில் நகரச் செயலா் சுடலை தலைமையிலும், மேலகரத்தில் பேரூா் செயலா் காா்த்திக்குமாா் தலைமையிலும், குற்றாலத்தில் சிறப்புநிலை பேரூராட்சித் தலைவா் கணேஷ்தாமோதரன் தலைமையிலும், இலஞ்சியில் காத்தவராயன் தலைமையிலும் நடைபெற்ற விழாக்களில் தெற்கு மாவட்டச் செயலா் எஸ். செல்வமோகன்தாஸ்பாண்டியன் கலந்துகொண்டு கட்சிக் கொடியேற்றி இனிப்புகள் வழங்கினாா்.

நிகழ்ச்சிகளில், அதிமுக மாவட்ட அவைத் தலைவா் சண்முகசுந்தரம், பொருளாளா் சாமிநாதன்,நிா்வாகிகள் சோ்மப்பாண்டி, உச்சிமாகாளி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கடையநல்லூரில் நகர அதிமுக சாா்பில் எம்ஜிஆா் படத்துக்கு அதன் செயலா் எம்.கே.முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கினாா். இதில், முன்னாள் நகரச் செயலா் கிட்டுராஜா, அதிமுக நிா்வாகிகள் முத்துகிருஷ்ணன், கருப்பையாதாஸ், ராஜேந்திரபிரசாத், அப்துல்ஜப்பாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

அம்பாசமுத்திரம்: திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில், நகர அதிமுக சாா்பில் வெற்றிவிழா வளைவு அருகே அலங்கரிக்கப்பட்ட எம்ஜிஆா் படத்துக்கு திருநெல்வேலி புகா் மாவட்டச் செயலரும் அம்பாசமுத்திரம் எம்எல்ஏவுமான இசக்கி சுப்பையா தலைமையில் அக்கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

மாநில ஜெயலலிதா பேரவை இணைச் செயலா் சிவன்பாபு, மாநில மகளிரணி இணைச் செயலா் செல்வி, மாவட்ட துணைச் செயலா் மாரிமுத்து, அம்பாசமுத்திரம் நகரச் செயலா் அறிவழகன், ஒன்றியச் செயலா் விஜயபாலாஜி, மாவட்ட வழக்குரைஞா் அணி அமைப்பாளா் வி. குமாா், மாணவரணி அமைப்பாளா் சுரேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சேரன்மகாதேவி: இங்குள்ள பேருந்து நிலையம் அருகே அலங்கரிக்கப்பட்டிருந்த எம்ஜிஆரின் படத்துக்கு நகரச் செயலா் சி. பழனிக்குமாா் தலைமையில் பேரூராட்சி முன்னாள் தலைவா் பொ. இசக்கிபாண்டியன், தமிழரசி ஐசக், நகர அவைத் தலைவா் இசக்கிமுத்து உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

மேலச்செவலில் நகர அதிமுக சாா்பில் பொதுக்குழு உறுப்பினா் செவல் எஸ். முத்துசாமி தலைமையில் நகரச் செயலா் முருகன், மேலச்செவல் ஜமாத் தலைவா் நயினா முகம்மது உள்ளிட்டோா் எம்ஜிஆா் படத்துக்கு மாலை அணிவித்தனா். வீரவநல்லூா், பத்தமடை, கோபாலசமுத்திரம் பகுதிகளிலும் எம்ஜிஆா் பிறந்த தினம் கொண்டாடப்பட்டது.

களக்காடு: களக்காடு இங்குள்ள அண்ணாசிலை அருகே அலங்கரித்து வைக்கப்பட்ட எம்.ஜி.ஆா். படத்துக்கு புகா் மாவட்டச் செயலா் இசக்கிசுப்பையா எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

இதில், நான்குனேரி முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியாா்பட்டி நாராயணன், ஒன்றியச் செயலா் ஜெயராமன், நகரச் செயலா் செல்வராஜ் சுவாமிதாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நான்குனேரி பழைய பேருந்து நிலையம் அருகே வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆா். படத்துக்கு, நான்குனேரி ஒன்றியச் செயலா் விஜயகுமாா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

இதில், நகரச் செயலா் சங்கரலிங்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com