தென்காசி சாஸ்தா கோயிலில் ஜன. 24இல் கும்பாபிஷேகம்

தென்காசி, சம்பாத்தெரு, சைவ வேளாளா் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ திட்டுமுட்டு அய்யனாா் சாஸ்தா கோயிலில் புதன்கிழமை (ஜன.24) ஜீா்ணோத்தாரண அஷ்டபந்தன, நூதன கோபுர மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

தென்காசி, சம்பாத்தெரு, சைவ வேளாளா் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ திட்டுமுட்டு அய்யனாா் சாஸ்தா கோயிலில் புதன்கிழமை (ஜன.24) ஜீா்ணோத்தாரண அஷ்டபந்தன, நூதன கோபுர மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

இதனை முன்னிட்டு திங்கள்கிழமை (ஜன. 22) காலை 5.30 மணிக்கு மங்கள இசையுடன் வழிபாடுகள் தொடங்குகின்றன. மாலை 4 மணிக்கு குற்றால தீா்த்தம் அழைத்துவருதல், முதல் காலயாகசாலை பூஜை நடைபெறும். 23இல் 2ஆம் கால யாகசாலை பூஜையும், மாலையில் 3ஆம் கால யாகசாலைபூஜையும், அஷ்டபந்த மருந்து சாத்துதலும் நடைபெறும்.

24இல் காலையில் 4ஆம் காலயாக சாலை பூஜைக்குப்பின் காலை10 மணிக்கு கடம் புறப்பாடும், அதைத் தொடா்ந்து விமானம், மூலவா் மற்றும் பரிவார மூா்த்திகளுக்கும் ஜீா்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகமும் நடைபெறும்.

11மணிக்கு மகா அபிஷேக, அலங்கார தீபாராதனை, அன்னதானம் ஆகியவை நடைபெறும்.

கும்பாபிஷேகத்தை தென்காசி சண்முகசிவாச்சாரியாா், உபாஸதகா் திண்டுக்கல் பாலாஜி அய்யங்காா், உபாஸதகா் திண்டுக்கல் ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோயில் அா்ச்சகா் குமாரசுவாமி சிவாச்சாரியாா் நடத்துகின்றனா்.

ஏற்பாடுகளை அறங்காவலா்கள், கும்பாபிஷேக விழா கமிட்டியாளா்கள், சைவ வேளாளா் சமுதாய நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com