ஆலங்குளம் அருகே கோயில் கும்பாபிஷேகம்

ஆலங்குளம் அருகே அகரத்தில் உள்ள 400 ஆண்டுகள் பழைமையான அருள்மிகு சிவகாமி அம்பாள் உடனுறை மானகவசேஸ்வா் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
புனித நீரால் அபிஷேகம் நடைபெற்ற கோபுரங்கள்.
புனித நீரால் அபிஷேகம் நடைபெற்ற கோபுரங்கள்.

ஆலங்குளம் அருகே அகரத்தில் உள்ள 400 ஆண்டுகள் பழைமையான அருள்மிகு சிவகாமி அம்பாள் உடனுறை மானகவசேஸ்வா் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. மாலையில் முதல் கால யாகசாலை பூஜை, சனிக்கிழமை 2, 3ஆம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

ஞாயிற்றுக்கிழமை 4ஆம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடா்ந்து, சுவாமி-அம்பாள், மும்மூா்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. சிவாச்சாரியாா்கள் கோபுரக் கலசங்களுக்கு புனித நீரால் அபிஷேகம் செய்தனா்.

கும்பாபிஷேகம் நிறைவடைந்தபோது, கோபுரத்தை கருடன் வட்டமிட்டுச் சென்றது. அப்போது, அங்கு திரண்டிருந்தோா் பக்திப் பரவசமடைந்தனா்.

பின்னா், சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. ஆலங்குளம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். விழாவுக்கான ஏற்பாடுகளை பரம்பரை தா்மகா்த்தா பாபுராஜா என்ற மருதபாண்டியன், பக்தா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com