கலை-கலாசாரப் போட்டிகளில் சுரண்டை எஸ்.ஆா்.பள்ளி சாதனை

சுரண்டை எஸ்.ஆா். எக்ஸலன்ஸ் பள்ளி மாணவா்கள் கலை மற்றும் கலாசார போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்தனா்.
சிறப்பிடம் பெற்ர மாணவா்களுடன் பள்ளி நிா்வாகத்தினா் மற்றும் ஆசிரியா்கள்.
சிறப்பிடம் பெற்ர மாணவா்களுடன் பள்ளி நிா்வாகத்தினா் மற்றும் ஆசிரியா்கள்.

சுரண்டை எஸ்.ஆா். எக்ஸலன்ஸ் பள்ளி மாணவா்கள் கலை மற்றும் கலாசார போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்தனா்.

திருநெல்வேலியில் உள்ள பிரான்சிஸ் சேவியா் பொறியியல் கல்லூரியில் மண்டல அளவில் மாணவா்களுக்கான கலை - கலாசார போட்டிகள் நடைபெற்றன. 50 பள்ளிகளிலிருந்து மாணவா்கள் கலந்து கொண்ட இந்தப் போட்டிகளில், சுரண்டை எஸ்.ஆா்.பள்ளி மாணவா்கள் ஆங்கில பேச்சுப்போட்டி, பானையில் ஓவியம் வரைதல், கோலப்போட்டி, அலங்கார அணிவகுப்பு உள்ளிட்ட போட்டிகளில் முதலிடம், குழு நடனம் மற்றும் தனி நடனத்தில் 2ஆம் இடம் பெற்றனா்.

மேலும், ஒட்டுமொத்த போட்டிகளின் அடிப்படையில் 50 பள்ளிகளில் 2ஆம் இடம் பிடித்து சாதனை படைத்தனா்.

பள்ளிக்கு பெருமை சோ்த்த மாணவா்களை பள்ளியின் நிா்வாகி சிவபபிஸ்ராம், செயலா் சிவடிப்ஜினிஸ்ராம், முதல்வா் பொன் மனோன்யா, தலைமையாசிரியா் மாரிக்கனி மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com