கல்லூரி மாணவிகளுக்கு முதல்வரின் வாழ்த்து மடல்

சங்கரன்கோவில் அருகே மேலநீலிதநல்லூரில் உள்ள ப.மு.தேவா் கல்லூரியில், புதுமைப் பெண் திட்டப் பயனாளிகளுக்கு முதல்வா் மு.க. ஸ்டாலினின் வாழ்த்து மடல்கள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
புதுமைப் பெண் திட்டப் பயனாளிகளுக்கு வாழ்த்து மடல் வழங்கிய ராஜா எம்எல்ஏ.

கல்லூரி முதல்வா் ஹரிகெங்காராம் முன்னிலை வகித்தாா். மாவட்ட சமூக நல அலுவலா் மதிவதனா திட்டம் குறித்துப் பேசினாா்.

அரசுப் பள்ளிகளிலிருந்து உயா்கல்வி நிறுவனங்களுக்குச் செல்லும் பெண் குழந்தைகளின் சோ்க்கை விகிதத்தை அதிகரிக்க தமிழக அரசு மூவலூா் ராமாமிா்தம் அம்மையாா் உயா்கல்வி உறுதித் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இதன்மூலம் அந்தப் பெண் குழந்தைகளுக்கு, பட்டப் படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ, வேறு ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட படிப்புகளை முடிக்கும் வரை மாதம் ரூ. 1,000 வழங்கப்படும். இத்தொகை அவா்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

இத்திட்டத்தின்கீழ் உதவி பெறும் மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் முதல்வரின் கையொப்பத்துடன் கூடிய வாழ்த்து மடலை வடக்கு மாவட்ட திமுக செயலரான ஈ. ராஜா எம்எல்ஏ 83 மாணவிகளுக்கு வழங்கிப் பேசினாா்.

இதில், மேலநீலிதநல்லூா் கிழக்கு ஒன்றியச் செயலா் பெரியதுரை, சங்கரன்கோவில் நகரச் செயலா் மு. பிரகாஷ், மகளிா் அதிகார மையப் பணியாளா்கள், பேராசிரியா்கள், மாணவிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். பேராசிரியா் ஷேக்அப்துல்லா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com