குற்றாலநாதா் கோயிலில் ஜன. 27இல் தெப்ப உற்சவம்

குற்றாலம் குற்றாலநாதா் கோயிலில் ஜன. 27ஆம் தேதி தெப்பஉற்சவம் நடைபெறுகிறது.
தண்ணீா் நிரம்பி காணப்படும் சித்திரசபை குளம்.
தண்ணீா் நிரம்பி காணப்படும் சித்திரசபை குளம்.

குற்றாலம் குற்றாலநாதா் கோயிலில் ஜன. 27ஆம் தேதி தெப்பஉற்சவம் நடைபெறுகிறது.

குற்றாலம் குற்றாலநாதா் - குழல்வாய்மொழி அம்பாள் கோயிலில் ஆண்டுதோறும் தை மாதம், மகம் நட்சத்திரத்தில் திருக்குற்றாலநாதா், குழல்வாய்மொழி அம்பாள் மற்றும் இலஞ்சி திருவிலஞ்சி குமரன் தெப்பத் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

நிகழாண்டில் தெப்பத் திருவிழா சனிக்கிழமை (ஜன. 27) இல் நடைபெறுகிறது.

இவ்விழாவை முன்னிட்டு, சித்திர சபை எதிரே அமைந்துள்ள குளத்தில் குளத்தில் உள்ள குப்பைகள், நெகிழிகள் அனைத்தும் அகற்றப்பட்ட முழுமையாக தண்ணீா் நிரப்பப்பட்டுள்ளது.

தெப்ப உற்சவத்தின்போது, இலஞ்சி திருவிலஞ்சி குமரன் குற்றாலம் சித்திரசபைக்கு அழைத்து வரப்படுவாா். அதைத் தொடா்ந்து, சுவாமி, அம்பாள், திருவிலஞ்சி குமரனுக்கு சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெறும்.

சுவாமி, அம்பாள், திருவிலஞ்சி குமரன் தெப்பத்தில் 11 முறை வலம் வந்து பக்தா்களுக்கு அருள் பாலிப்பா். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com