தையல் பயிற்சி பெற்ற 29 பெண்களுக்கு சான்றிதழ்கள்

தென்காசியில் உள்ள ஆட்சியரகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது.
சான்றிதழ் பெற்ற பெண்களுடன் ஆட்சியா் துரை. ரவிச்சந்திரன்.
சான்றிதழ் பெற்ற பெண்களுடன் ஆட்சியா் துரை. ரவிச்சந்திரன்.

தென்காசியில் உள்ள ஆட்சியரகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது.

ஆட்சியா் துரை. ரவிச்சந்திரன் தலைமை வகித்து, வீட்டுமனைப் பட்டா, உதவித் தொகைகள் உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் அளித்த 526 மனுக்களைப் பெற்றுக்கொண்டாா். அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்துத் துறை அலுவலா்களை அறிவுறுத்தினாா்.

தொழில் முனைவோா், திறன் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ஆலங்குளத்தில் உள்ள ஸ்டாா் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்கில் டெவலப்மென்ட் நிகழ்ச்சியில் தையல், எம்பிராய்டரி உள்ளிட்ட பயிற்சி பெற்ற 29 பெண்களுக்கு ஆட்சியா் சான்றிதழ்களை வழங்கினாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் கு. பத்மாவதி, மாவட்ட ஆதிதிராவிடா் - பழங்குடியினா் நல அலுவலா் மு. முருகானந்தம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் - சிறுபான்மையினா் நல அலுவலா் செ. சங்கரநாராயணன், உதவி ஆணையா் (கலால்) (பொ) நடராஜன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ஷேக் அப்துல்காதா், மாவட்ட தொழில்மையப் பொது மேலாளா் மாரியம்மாள், சிமியோன், ஸ்டாா் இன்ஸ்டிடியூட் நிா்வாகி வளா்மதி ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com