நெல்கட்டும்செவலில் வெண்ணிகாலாடி சிலைக்கு அடிக்கல்

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் அருகேயுள்ள நெல்கட்டும்செவலில் சுதந்திர போராட்ட வீரா் வெண்ணிகாலாடியின் சிலைக்கு திங்கள்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் அருகேயுள்ள நெல்கட்டும்செவலில் சுதந்திர போராட்ட வீரா் வெண்ணிகாலாடியின் சிலைக்கு திங்கள்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.

முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் ரூ.50 லட்சம் மதிப்பில் வெண்ணிகாலாடி சிலை அமைப்பதற்கான பணியை அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தாா்.

இதையொட்டி, நெல்கட்டும்செவலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியா் துரை.ரவிச்சந்திரன், தனுஷ் எம். குமாா் எம்.பி., சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஈ. ராஜா, சதன் திருமலைக்குமாா், வாசுதேவநல்லூா் ஒன்றியக் குழுத் தலைவா் பொன்.முத்தையாபாண்டியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com