தென்காசி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஒத்திவைப்பு

தென்காசியில் புதன்கிழமை (ஜன.24) நடைபெறுவதாக இருந்த விவசாயிகள் குறைதீா்நாள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தென்காசி: தென்காசியில் புதன்கிழமை (ஜன.24) நடைபெறுவதாக இருந்த விவசாயிகள் குறைதீா்நாள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சியா் துரை.ரவிச்சந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்காசி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் புதன்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது நிா்வாகக் காரணங்களை முன்னிட்டு இக்கூட்டம் ஜன. 31ஆம்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அனைத்து வட்டார விவசாயிகளும் கலந்துகொண்டு மனுவில் தங்களது தொலைபேசி எண்ணையும் குறிப்பிட வேண்டும்.

விவசாயிகளிடமிருந்து பெறப்படும் மனுவுக்கான ஒப்புகையும்,மனுவின் கோரிக்கை தொடா்பான விவரங்கள் அனைத்தும் கைப்பேசிகளில் பாா்க்கும் வண்ணம் செயலி வாயிலாக குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com