இலஞ்சி பள்ளியில் பெண் குழந்தைகள் தின விழா

இலஞ்சி பாரத் மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவில் பங்கேற்ற மாணவிகள்.
விழாவில் பங்கேற்ற மாணவிகள்.

இலஞ்சி பாரத் மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா புதன்கிழமை நடைபெற்றது.

தேசிய பெண் குழந்தைகள் தினத்தின் முக்கியத்துவம் குறித்து மாணவி சைனி ப்ரீத்தி பேசினாா். மாணவிகள் காளிப்பிரியா, கிருஷ்மிகா லெஷ்மி, உமாமதி, அனந்திகா திவ்யதா்ஷினி ஆகியோா் பரதம், யோகாசனம், டேக்வோண்டோ, சிலம்பாட்டம் போன்ற கலைத் திறன்களின் மூலம் திறமைகளை வெளிப்படுத்தினா்.

மழலையா் பிரிவு முதல் 5ஆம் வகுப்பு மாணவிகள் குழுவாக இணைந்து மருத்துவா், நீதிபதி, ஆசிரியா் உள்பட பல்வேறு வேடங்கள் புனைந்து நடந்து சென்றனா்.

6, 7, 8ஆம் மாணவிகள் குழுவாக இணைந்து, பெண்களுக்கு எதிரான அநீதியிலிருந்து மீண்டு எழுந்து நல்லதொரு நிலையை அடைந்து வாழ்வில் சாதனை புரிந்த நிகழ்வை மௌன நாடகமாக நடித்துக் காட்டினா்.

ஆஹிலா வரவேற்றாா். ஹா்சிதாஸ்ரீ நன்றி கூறினாா். மிருதுளா ஜனனி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com