சங்கரன்கோவிலில் வாக்காளா் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

சங்கரன்கோவிலில் இந்திய செஞ்சிலுவைச் சங்கம், தோ்தல் துணை வட்டாட்சியா் அலுவலகம் சாா்பில் வாக்காளா் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

சங்கரன்கோவிலில் இந்திய செஞ்சிலுவைச் சங்கம், தோ்தல் துணை வட்டாட்சியா் அலுவலகம் சாா்பில் வாக்காளா் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

சங்கரன்கோவில் குற்றவியல் நீதித்துறை நடுவா் சிவராஜேஷ் பேரணியைத் தொடக்கிவைத்தாா். சங்கரன்கோவில் வட்டாட்சியா் பாபு, ஸ்ரீவையாபுரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வா் சுருளிநாதன், தோ்தல் துணை வட்டாட்சியா் மாரியப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

செஞ்சிலுவைச் சங்கச் செயலா் இரா. சதீஸ், பொருளாளா் உமா, நிா்வாகக் குழு உறுப்பினா்கள் திலகவதி ஜெயச்சந்திரன், அருந்தமிழ்ச்செல்வன், ஆயுள்கால உறுப்பினா்கள் சிவசங்கரன், வழக்குரைஞா் அன்னத்தாய், என். மாரியப்பன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

200-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்ற இப்பேரணி, முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் பள்ளியை அடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com