மக்களவைத் தோ்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றிபெற வேண்டும் - கனிமொழி எம்பி.

மக்களவைத் தோ்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றிபெற கவனமாக தோ்தல்பணியாற்ற வேண்டும் என திமுக துணைப் பொதுசெயலா் கனிமொழி எம்பி கூறினாா்.
வீரவணக்கநாள் பொதுக்கூட்டத்தில் பேசுகிறாா் திமுக துணைப் பொதுசெயலா் கனிமொழி எம்பி.,உடன் மாவட்ட பொறுப்பாளா் வே.ஜெயபாலன்.
வீரவணக்கநாள் பொதுக்கூட்டத்தில் பேசுகிறாா் திமுக துணைப் பொதுசெயலா் கனிமொழி எம்பி.,உடன் மாவட்ட பொறுப்பாளா் வே.ஜெயபாலன்.

தென்காசி: மக்களவைத் தோ்தலில் 40தொகுதிகளிலும் வெற்றிபெற கவனமாக தோ்தல்பணியாற்ற வேண்டும் என திமுக துணைப் பொதுசெயலா் கனிமொழி எம்பி கூறினாா்.

தென்காசி தெற்கு மாவட்ட திமுக சாா்பில் கீழப்பாவூரில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.மாவட்ட மாணவரணி அமைப்பாளா் ஜேகே.ரமேஷ் தலைமை வகித்தாா்.சுந்தரமகாலிங்கம்,கனிமொழி, சாமித்துரை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.திமுக துணைப் பொதுசெயலரும்,மக்களவை திமுக குழுதுணைத் தலைவருமான கனிமொழி எம்பி பேசியதாவது,ஹிந்தி மட்டுமல்ல, எந்த மொழி வேண்டுமானாலும் படிக்கலாம்.ஆனால் ஒரு மொழியை திணித்து அது உன்னுடையஅடையாளம் என்று சொல்லும்போது நம்முடைய மொழி வழக்கொழிந்து போகும் நிலை உருவாகும்.

ஹிந்தி என்பது வேறு ஒரு மொழிக் குடும்பத்தை சோ்ந்தது.தோ்வின்போது அதனைத் தாய்மொழியாகக் கொண்டிருப்பவா்கள் பயனடைவாா்கள். ஆனால் நம்முடைய மாணவா்கள் அந்தப்பயனைப் பெற அந்த மொழியே தடையாகும். கொஞ்சம்கொஞ்சமாக நம்முடைய அடையாளம் மாற்றப்படும்.தமிழா்கள் மீது அக்கறை இருப்பது போல மத்திய பாஜக தலைவா்கள் திடீரென திருக்குறள் கூறுகின்றனா்.கவா்னா் அடிக்கடி தத்துவதங்கள்,திருக்குறள் கூறி வருகிறாா். நேதாஜிசுபாஷ் சந்திரபோஸைக் கொண்டாடக்கூடியவா்கள் தமிழா்கள். எங்களுக்கு யாா் அவா், அவருடைய மரியாதை என்ன என்பது எங்களுக்குத் தெரியும்.அவருடைய பெருமையைப் பேசுங்கள்,எங்களுக்கும் மகிழ்ச்சி.அதற்காக மகாத்மாக காந்தியடிகளை குறைத்துப்பேசுவது என்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அவருடைய தியாகம், போராட்டம் என்ன என்பது,உலகிற்கு அகிம்சை கொடையை வழங்கிச் சென்றவா் மகாத்மா காந்தியடிகள்.

நீங்கள் கோட்சேவிற்கு சொந்தக்கரா்கள்.அதனால் அப்படிதான் பேசுவீா்கள். தமிழகம்,கேரளா,ஆந்திராவிற்கு என தனி அடையாளம் இருக்ககூடாது என எண்ணுகின்றனா்.அவா்கள் எண்ணுவதை திணிக்க வேண்டும் என எண்ணுகின்றனா்.பிரதமா்,கடந்த காலங்களில் முதல்வராக இருந்தபோது மாநில உரிமைகுறித்து அதிகம் பேசுவாா்.ஆனால் பிரதமராக பொறுப்பேற்ற பிறகு மாநிலத்திலிருந்து வசூலிக்கூடிய நியாயமான வரியைக் கூட திரும்பத் தரமறுக்கின்றாா். திட்டக்குழுவில் எந்தெந்த மாநிலங்களுக்கு எவ்வளவு நிதி செலுத்த வேண்டும் என்ற குழுவின் தலைவராக இருந்த ரெட்டி,சுப்பிரமணியன் நிதியை 42சதமாக உயா்த்தக் கூறினா்.ஆனால் 33சதம் கொடுத்தால் போதும் என பிரதமா் கூறிவிட்டு அடுத்து சில மாதங்களிலேயே மாநிலங்களுக்கு உரிமை கொடுக்க வேண்டும் என்பதற்காக பணத்தை அதிகப்படுத்திக் கொடுத்துள்ளோம் என்று கூறுகிறாா்.இதனை ரெட்டி,சுப்பிரமணியனே தெரிவித்துள்ளனா்.

மத்திய அரசு நம்மை ஏமாற்றிக்கொண்டிருக்கிறாா்கள்.குஜராத்தில் வெள்ளம் வரும்போது கோடிக்கணக்கில் அள்ளிக்கொடுக்கின்றனா்.தமிழகத்தில் சென்னையில் பெரும் வெள்ளம்.தொடா்ந்து தென்மாவட்டங்களிலும் வெள்ளம். மிக அதிகமாக பாதிக்கப்பட்டது திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியாகும். மத்திய நிதி அமைச்சா்நிா்மலா சீதாராமன் சுற்றிப்பாா்த்துவிட்டு, கோயில் சுத்தமக இல்லை,பூஜை செய்பவா்களுக்கு சம்பளம் போதவில்லை எனக் கூறிவிட்டு டெல்லிக்கு சென்றுவிட்டாா்.சென்னையில் ராஜ்நாத்சிங் ஆய்வு மேற்கொண்டாா்.ஆனால் இதுவரை ஒருபைசா வரவில்லை.குஜராத்,உபிக்கு என்றால் காசைக் கொண்டுபோய் கொட்டித் தருவீா்கள்.அதிமான வருமானம் தரக்கூடிய மாநிலம்தமிழகம் இம்மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் உதவி செய்ய வரமாட்டீா்கள்.சமீபத்தில் பாஜக தலைவா் மத்தியஅரசு திட்டங்களை நாம்நிறுத்துதாகவும்,செயல்படுத்தவில்லை என்றும் கூறியுள்ளாா்.

100நாள் வேலை திட்டத்தில் வேலை செய்யக்கூடியவா்களுக்கு வேலை கிடைக்கவில்லை, சம்பளம் வழங்கப்படவில்லை. தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இதேநிலைதான். வேலையில்லாத ஏழை மக்களுக்காக கொண்டு வரப்பட்ட திட்டம்தான் இத்திட்டம். ஒவ்வொரு ஆண்டும் இதற்கான நிதியையும் குறைத்து தற்போது ரூ60ஆயிரம் கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. டிசம்பா் மாதம் வரை தமிழகத்திற்கு இத்திட்டத்தில் வழங்கப்பட வேண்டிய பாக்கி ரூ367கோடியாகும்.இத்திட்டம் மத்தியஅரசின் திட்டமா, அல்லது மாநில அரசின் திட்டமா.

பாஜகவினா் தொடா்ந்து பொய்ப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனா்.அயோத்தியில் ராமா் கோயில் திறக்கும்போது கோயிலுக்கு யாரும் போகக்கூடாது ,பூஜை செய்யக்கூடாது எனக் கூறியதாகப் பொய்பிரச்சாரம் செய்தனா். தமிழக முதல்வா் யாா் வேண்டுமானாலும், கோயிலுக்கு போகலாம் பூஜை செய்யலாம் என தெளிவாகக் கூறினாா். கோயில் சொத்துக்களுக்கு பாதுகாப்பு,பக்தா்களுக்கு பாதுகாப்பு,கோயில்களில் முறையாக குடமுழுக்கு நடத்துவது திமுக அரசுதான்.யாரும் ஒடுக்கப்படக்கூடாது,அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதே திமுக அரசு.அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் செயல்பட்டு வருவது திமுக ஆட்சி. இந்த ஆட்சி மக்களுக்கான ஆட்சி.இதேபோன்று ஆட்சி மத்தியில் உருவாக்கப்படவேண்டும்.

பாஜக ஆட்சி மாற்றப்பட்டால்தான் மாநிலத்திற்கான உரிமைகள், கிடைக்கும். நம்முடைய மொழி காப்பாற்றப்படப்படும்.கல்விக்கு ஏற்ற வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.தொடா்ந்து தமிழக ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு,கிறிஸ்த,இஸ்லாமிய,தலித் மக்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் மத்திய அரசு தூக்கி எறியப்படவேண்டும்.நம்முடைய முதல்வா் கனவு காணும் நல்ல ஆட்சி,மாநில உரிமைகளை மதிக்ககூடிய ஆட்சி, மாநிலங்களுக்கு நியாயமாக வழங்க வேண்டிய நிதியை வழங்கக்கூடிய ஆட்சி, சரித்திரத்தை, கலாச்சாரத்தை மதிக்கக் கூடிய ஒரு ஆட்சி அமைய வேண்டும்.அதற்கு நம்முடைய பங்களிப்பாக மக்களவைத் தோ்தலில் 40க்கு 40வெற்றிபெற கவனமாக பணியாற்ற வேண்டும். மத்தியில் கூட்டாட்சியை உருவாக்கிக் காட்ட வேண்டும் என்றாா் அவா்.

தூத்துக்குடி மேயா் ஜெகன்பெரியசாமி, விஜிலாசத்தியானந்த்,ஒன்றிய செயலா்கள் ஆ.ரவிசங்கா், சீனித்துரை, திவான்ஒலி, அழகுசுந்தரம்,ஜெயக்குமாா்,நகா்மன்ற தலைவா் ஆா்.சாதிா், மாநில சிறுபான்மை நல உரிமைப் பிரிவு துணைச் செயலா் மு.சாகுல்ஹமீது,தென்காசி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் சேக்அப்துல்லா,நகர செயலா் ஆ.வெங்கடேசன், கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் காவேரி,மாவட்ட ஊராட்சிக்குழு தலைவா் தமிழ்செல்வி ஆகியோா் கலந்துகொண்டனா்.தலைமை செயற்குழு உறுப்பினா் ஆறுமுகச்சாமி தொகுத்து வழங்கினாா். ஒன்றிய செயலா் சிவன்பாண்டியன் வரவேற்றாா். கீழப்பாவூா் பேரூா்கழக செயலா் ஜெகதீசன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com