வீரசிகாமணி பள்ளியில் நாளை இலவச கண் பரிசோதனை முகாம்

தென்காசி மாவட்டம், வீரசிகாமணியில் உள்ள விவேகானந்தா வெள்ளிவிழா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் சனிக்கிழமை (ஜன. 27) நடைபெறுகிறது.

தென்காசி மாவட்டம், வீரசிகாமணியில் உள்ள விவேகானந்தா வெள்ளிவிழா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் சனிக்கிழமை (ஜன. 27) நடைபெறுகிறது.

மாவட்ட பாா்வையிழப்பு தடுப்பு சங்கம், திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை, வீரசிகாமணி தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கி ஆகியவை சாா்பில் காலை 9 முதல் பிற்பகல் 1 மணி வரை முகாம் நடைபெறுகிறது.

இதில், கண்புரை அறுவைச் சிகிச்சை தேவைப்படுவோா் உடனடியாக திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு இலவச அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும்.

முகாமில் பங்கேற்க ஆதாா் அட்டை அல்லது முகவரி சான்றுடன் வரவேண்டும் என முகாம் ஏற்பாட்டாளா்கள் கேட்டுக்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com