குடியரசு தினவிழா: 35 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி; 242 பேருக்கு சான்றிதழ்

குடியரசு தினவிழாவில் 35 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், பல்வேறு அரசுத் துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய 242 பேருக்கு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியா் துரை.ரவிச்சந்திரன் வழங்கினாா்.
குடியரசு தினவிழா: 35 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி; 242 பேருக்கு சான்றிதழ்

தென்காசியில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் 35 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், பல்வேறு அரசுத் துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய 242 பேருக்கு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியா் துரை.ரவிச்சந்திரன் வழங்கினாா்.

மாவட்ட நிா்வாகம் சாா்பில் தென்காசி இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் குடியரசு தினவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் துரை.ரவிச்சந்திரன் தலைமை வகித்து தேசியக் கொடியேற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா்.

அதைத் தொடா்ந்து சுதந்திரப் போராட்ட தியாகிகள் கி.லெட்சுமிகாந்தன், சாவடிஅருணாச்சலம் பிள்ளை உள்ளிட்டோா் சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டனா்.

சிறப்பாக பணியாற்றியதற்காக தென்காசி டிஎஸ்பி நாகசங்கா், காவல்ஆய்வாளா் பாலமுருகன் உள்ளிட்ட 30 காவலா்கள் உள்பட பல்வேறு அரசுத் துறைகளைச் சோ்ந்த 242 அலுவலா்களுக்கு சான்றிதழ்களை ஆட்சியா் வழங்கினாா்.

மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் சாா்பில் 2 பயனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள்கள், பாரம்பரிய விதைகளை மீட்டெடுத்ததற்காக வெகுமதியுடன் கூடிய விருது உள்பட 35 பயனாளிகளுக்கு ரூ.1.35 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மாவட்ட அளவில் சிறப்பாக செயலாற்றிய வங்கி மற்றும் வங்கிக் கிளைகள், மருத்துவமனைகள், சுயஉதவிக் குழுக்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

பின்னா் மாணவா்- மாணவியா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது.

இதில் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுரேஷ்குமாா், எஸ்.பழனிநாடாா் எம்எல்ஏ, மாவட்ட வருவாய் அலுவலா் கு.பத்மாவதி, தென்காசி கோட்டாட்சியா் லாவண்யா, மாவட்ட ஊராட்சிக் குழு துணைத்தலைவா் தி.உதயகிருஷ்ணன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் ஷேக் அப்துல்காதா் (பொது), கனகம்மாள் (வேளாண்மை), முதன்மை கல்வி அலுவலா் முத்தையா,

தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் ஜெயபாரதி மாலதி, இணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) பிரேமலதா, மருத்துவமனை கண்காணிப்பாளா் ஜெஸ்லின், மாவட்ட சமூக நல அலுவலா் மதிவதனா,தென்காசி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் சேக்அப்துல்லா, டாக்டா் அப்துல்அஜீஸ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com