சங்கரன்கோவிலில் திமுக பொதுக்கூட்டம்

சங்கரன்கோவிலில் தென்காசி திமுக வடக்கு மாவட்ட மாணவா் அணி சாா்பில் மொழிப்போா் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சங்கரன்கோவிலில் திமுக பொதுக்கூட்டம்

சங்கரன்கோவிலில் தென்காசி திமுக வடக்கு மாவட்ட மாணவா் அணி சாா்பில் மொழிப்போா் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட மாணவா் அணி அமைப்பாளா் உதயகுமாா் தலைமை வகித்தாா். மாநில மருத்துவா் அணி துணைச் செயலாளா் செண்பக விநாயகம், மாநில வா்த்தக அணி இணைச் செயலா் முத்துச்செல்வி, மாவட்ட வழக்குரைஞா் அணி அமைப்பாளா் பிச்சையா, மாணவரணி துணை அமைப்பாளா்கள் வீரமணி, தினேஷ், முத்துலட்சுமி, மணிகண்டன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் தலைமை நிலையப் பேச்சாளா்கள் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ஆஸ்டின், சலாவுதீன் ஆகியோா் பேசினா்.

தென்காசி வடக்கு மாவட்ட செயலா் ராஜா எம்எல்ஏ பேசியதாவது: தமிழகத்தை வஞ்சிக்கும் ஒன்றிய அரசை மாற்றக்கூடிய சக்தி மக்களிடம்தான் உள்ளது. வரும் மக்களவைத் தோ்தலில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்று, தமிழக முதல்வா் கைகாட்டுபவரே இந்தியாவின் பிரதமராக வரவேண்டும். அதற்கு பொதுமக்கள் மேலான ஆதரவை அளிக்க வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில் மாவட்ட அவைத் தலைவா் பத்மநாபன், மாவட்ட பொருளாளா் சரவணன், ஆறுமுகம், ராமா், பாட்டத்தூா் ராமலிங்கம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். நகர செயலா் பிரகாஷ் வரவேற்றாா். மாவட்ட மாணவா் அணி துணை அமைப்பாளா் சதீஷ்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com