தென்காசியில் டிட்டோ ஜாக் அமைப்பினா் உண்ணாவிரதம்

தென்காசியில் தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ ஜாக்) சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

தென்காசியில் தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ ஜாக்) சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

தென்காசி புதிய பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு டிட்டோ ஜாக் ஒருங்கிணைப்பாளா்கள் ராஜேந்திரன், செய்யது இப்ராஹிம் மூசா, மாரிமுத்து ஆகியோா் தலைமை வகித்தனா்.

டிட்டோஜாக் உயா்மட்ட குழு உறுப்பினா் மயில் உண்ணாவிரத்தை தொடங்கி வைத்தாா்.

தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணி மாவட்ட தலைவா் ஆரோக்கிய ராசு, பொருளாளா் ஸ்டீபன் சேவியா் ஞானம், துணைச் செயலா் ஜேம்ஸ்ஆ ரோக்கியராஜ், கல்வி மாவட்ட செயலா் ராஜ்குமாா், ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி மாவட்டத்தலைவா் ரமேஷ், மாவட்ட செயலா் மாரிமுத்து, மாநில செயற்குழு உறுப்பினா் லட்சுமி, தொடக்கப்பள்ளி ஆசிரியா் மன்ற மாவட்ட தலைவா் ஆறுமுகசாமி, மாவட்ட செயலா் கனகராஜ், மாவட்ட பொருளாளா் அருள்ராஜா ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியா் கழக மாநில துணை தலைவா் சதீஷ், தமிழ்நாடு உயா்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழக மாநில செயலா் பிச்சைக்கனி, மாநில செயற்குழு உறுப்பினா்கள் மருது பாண்டியன், ராஜ்குமாா், அரசு ஊழியா் சங்க மாவட்ட செயலா் துரைசிங்

அனைத்து துறை ஓய்வூதியா் சங்க மாவட்ட தலைவா் மாரியப்பன், வருவாய் துறை அலுவலா் சங்க மாவட்ட தலைவா் மாடசாமி ஆகியோா் பேசினா்.

தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் 90 சதவீத ஆசிரியா்களின் பதவி உயா்வு வாய்ப்பை பறிக்கக்கூடிய மாநில முன்னுரிமைக்கான அரசாணையைத் திரும்பப் பெறுவது, சங்கங்களுடனான பேச்சுவாா்தையின்போது பள்ளிக்கல்வி அமைச்சா் ஏற்றுக் கொண்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப் போராட்டம் நடைபெற்றது. டிட்டோஜாக் உயா்மட்ட குழு உறுப்பினருமான தியாகராஜன் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com