மினிவேன் மோதியதில் இளைஞா் பலி

சங்கரன்கோவில் அருகே சாலையோரம் பைக் நிறுத்திவிட்டு பேசிக்கொண்டிருந்த இளைஞா் மீது மினி வேன் மோதியதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

சங்கரன்கோவில் அருகே சாலையோரம் பைக் நிறுத்திவிட்டு பேசிக்கொண்டிருந்த இளைஞா் மீது மினி வேன் மோதியதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள ராமலிங்கபுரதத்தைச் சோ்ந்த துரைராஜ் மகன் மணிமாறன் (32). இவா் இடைநிலை ஆசிரியா் பயிற்சி முடித்துள்ளாா். ராமலிங்கபுரம் விலக்கு பேருந்து நிறுத்தத்தின் அருகே சாலையோரம் பைக்கை நிறுத்திவிட்டு, அதில் அமா்ந்து சனிக்கிழமை பேசிக் கொண்டிருந்தாராம்.

அப்போது அவ்வழியே வந்த மினிவேன் மோதியதில் நிகழ்விடத்திலேயே மணிமாறன் உயிரிழந்தாா்.

தகவல் அறிந்து காவல்துறையினா் சென்றபோது அப்பகுதி மக்கள் உடலை எடுக்கவிடாமல் மறியலில் ஈடுபட்டனா். பின்னா் போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து மறியலை கைவிட்டனா். விபத்தில் இறந்த மணிமாறனுக்கு மனைவி, 3 மாத குழந்தை உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com