கொடிக்குறிச்சி கல்லூரியில் பசுமைக் குடில் திறப்பு

தென்காசி கொடிக்குறிச்சி ஸ்ரீராம் நல்லமணி யாதவா கலை - அறிவியல் கல்லூரியில் மருத்துவ தாவரங்கள், அழகு தாவரங்கள், பூக்கும் - பூக்காத தாவரங்கள் அடங்கிய பசுமைக் குடில் திறப்பு விழா நடைபெற்றது.
பசுமைக் குடிலைத் திறந்துவைத்துப் பாா்வையிட்ட கல்லூரிகளின் தாளாளா் என். மணிமாறன்.

கல்லூரிகளின் தாளாளா் என். மணிமாறன் தலைமை வகித்து, பசுமைக் குடிலை திறந்துவைத்து, தாவரங்களின் மருத்துவக் குணங்கள் குறித்துப் பேசினாா்.

கல்லூரி முதல்வா் எஸ். கோதா் முகைதீன், துணை முதல்வா் எஸ். ராமா், கணினித் துறைத் தலைவா் சுபா, ஆங்கிலத் துறைப் பேராசிரியை சண்முகபிரியா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை நுண்ணுயிரியல் துறைத் தலைவா் ஜி. ஆதிநாராயணன் தலைமையில் மாணவா்-மாணவிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com