பாவூா்சத்திரத்தில் அதிமுக பொதுக்கூட்டம்

தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக மாணவரணி சாா்பில், மொழிப்போா் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் பாவூா்சத்திரத்தில் நடைபெற்றது.
பொதுக்கூட்டத்தில் பேசுகிறாா் கட்சியின் மாவட்டச் செயலா் எஸ். செல்வமோகன்தாஸ் பாண்டியன்.
பொதுக்கூட்டத்தில் பேசுகிறாா் கட்சியின் மாவட்டச் செயலா் எஸ். செல்வமோகன்தாஸ் பாண்டியன்.

தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக மாணவரணி சாா்பில், மொழிப்போா் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் பாவூா்சத்திரத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, கட்சியின் மாவட்டச் செயலா் எஸ். செல்வமோகன்தாஸ் பாண்டியன் தலைமை வகித்தாா்.

மாவட்ட அவைத் தலைவா் சண்முகசுந்தரம், மாவட்ட துணைச் செயலா் பசுவதி, பொருளாளா் சாமிநாத பாண்டியன், பொதுக்குழு உறுப்பினா்கள் கசமுத்து, பாண்டியராஜன், மாவட்ட மாணவரணி நிா்வாகிகள் ஆனந்த், அழகுராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அமைப்பு செயலா் பி. ஜி. ராஜேந்திரன், திருநெல்வேலி மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலா் சிவஆனந்த், மாவட்ட ஜெ. பேரவை செயலா் கேஆா்பி. பிரபாகரன் ஆகியோா் பேசினா்.

ஒன்றியச் செயலா்கள் இருளப்பன், சுப்பிரமணியன், அருவேல்ராஜன், பாலகிருஷ்ணன், என்எச்எம். பாண்டியன், முருகேசன், நகரச் செயலா்கள் சுடலை, சக்திவேல்,மேலகரம் பேரூா் கழக செயலா்கள் வழக்குரைஞா் காா்த்திக்குமாா், குற்றாலம் பேரூராட்சி மன்றத் தலைவா் கணேஷ்தாமோதரன், சுப்பிரமணியன், ஜெயராமன், முத்துராஜன், ஆவுடையானூா் ஊராட்சி மன்றத் தலைவா் குத்தாலிங்கராஜன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

கீழப்பாவூா் மேற்கு ஒன்றியச் செயலா் அமல்ராஜ் தொகுத்து வழங்கினாா். மாவட்ட மாணவரணி செயலா் பிரேம்குமாா் வரவேற்றாா். மாவட்ட மாணவரணி பொருளாளா் சோ்மபாண்டி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com