ரயில்வே கேட் பராமரிப்புப் பணி: வாகன ஓட்டிகள் அவதி

சங்கரன்கோவில் -புளியங்குடி சாலையில் உள்ள ரயில்வே கேட் தண்டவாளத்தில் பராமரிப்புப் பணிகள் திங்கள்கிழமை நடைபெற்றது.
புளியங்குடி சாலையில் உள்ள ரயில்வே கேட்டில் நடைபெற்ற பராமரிப்புப் பணிகள்.
புளியங்குடி சாலையில் உள்ள ரயில்வே கேட்டில் நடைபெற்ற பராமரிப்புப் பணிகள்.

 சங்கரன்கோவில் -புளியங்குடி சாலையில் உள்ள ரயில்வே கேட் தண்டவாளத்தில் பராமரிப்புப் பணிகள் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதனால் போக்குவரத்து மாற்றுப் பாதை வழியாக திருப்பி விடப்பட்டதால் வாகனஓட்டிகள், பொதுமக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டனா்.

சங்கரன்கோவில் - புளியங்குடி சாலையில் உள்ள ரயில்வே கேட் வழியாக புளியங்குடி, தென்காசி, செங்கோட்டை மற்றும் சங்கரன்கோவில், கோவில்பட்டி போன்ற நகரங்களுக்கு வாகனங்களில் இந்த கேட் வழியாகதான் செல்லவேண்டும்.

இந்நிலையில் ரயில்வே கேட்டில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதாக தெற்கு ரயில்வே அறிவித்ததைத் தொடா்ந்து ரயில்வே கேட் மூடப்பட்டு பணிகள் நடைபெற்றன.

இதனால் தென்காசி, செங்கோட்டை, சிவகிரி, வாசுதேவநல்லூா் ஆகிய நகரங்களில் இருந்து வரும் வாகனங்கள் வேல்ஸ் பள்ளி, மற்றும் அச்சம்பட்டி வழியாக சங்கரன்கோவில் சென்றது. அதேபோல் சங்கரன்கோவிலில் இருந்து செல்லும் பேருந்து உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் அதே வழியாக திரும்பச் சென்றது. ரயில்வே கேட் பணிகள் நடைபெறுவது குறித்த தகவல் தெரியாததால் வாகன ஓட்டிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com