விவசாய தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

ஆலங்குளம் ஒன்றிய அலுவலக வளாகத்தில் விவசாய தொழிலாளா் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
விவசாய தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

ஆலங்குளம் ஒன்றிய அலுவலக வளாகத்தில் விவசாய தொழிலாளா் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மகாத்மா காந்தி ஊரக வேலைஉறுதித் திட்டத்தில் ஆதாா் இணைப்புடன் கூடிய பரிவா்த்தனை முறையை திரும்பப் பெற வேண்டும், அட்டை பெற்றுள்ள அனைவருக்கும் சீரான வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்திற்கு வட்டப் பொறுப்பாளா் ராமசாமி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் குணசீலன், மாா்க்சிஸ்ட் வட்டச் செயலா் பாலு, விவசாய சங்க மாவட்டக் குழு உறுப்பினா் நல்லையா, மாதா் சங்க நிா்வாகிகள் லெட்சுமி, சின்னத்தாய் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com