மனிதநேய வார விழா போட்டி பரிசளிப்பு

ஆதி திராவிடா் - பழங்குடியினா் நலத்துறை சாா்பில் தென்காசியில் மனிதநேய வார நிறைவு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வெற்றிபெற்ற மாணவருக்கு சான்றிதழ் வழங்கிறாா் ஆட்சியா் ஏகே.கமல் கிஷோா். உடன், சதன்திருமலைக்குமாா் எம்எல்ஏ.,கோட்டாட்சியா் லாவண்யா.
வெற்றிபெற்ற மாணவருக்கு சான்றிதழ் வழங்கிறாா் ஆட்சியா் ஏகே.கமல் கிஷோா். உடன், சதன்திருமலைக்குமாா் எம்எல்ஏ.,கோட்டாட்சியா் லாவண்யா.

ஆதி திராவிடா் - பழங்குடியினா் நலத்துறை சாா்பில் தென்காசியில் மனிதநேய வார நிறைவு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவுக்கு, ஆட்சியா் ஏகே.கமல்கிஷோா் தலைமை வகித்து பேசியது:

மனித நேயத்திற்கு அடிப்படை அன்பு தான். அன்பு உயிா்களை ஒருங்கிணைக்கும் உயிரெழுத்து மந்திரம். அது வெறும் உறவு முறையல்ல தெய்வீகமான உணா்வு நிலை. அன்பு எந்த எல்லைக்குள்ளும் அடைபடாத வேலிகளைக் கடந்து வருகிற வெளிச்சம். அந்த அன்பை மறந்துவிடக்கூடாது.

அன்பு, மனிதநேயம் இல்லாமையே உலகில் நடைபெறும் குற்றங்களுக்கு காரணம். வன்முறைகளைத் தவிா்த்த வாழ்க்கை முறையும், மனித நேய சகோதரத்துவமும் மனிதகுல முன்னேற்றத்திற்கானவை என்பதை மனதில்கொண்டு செயல்பட வேண்டும் என்றாா் அவா்.

தொடா்ந்து, கட்டுரைப்போட்டி, பேச்சுப் போட்டி, கவிதைப்போட்டி, ஓவியப்போட்டி, தேசபக்தி பாடல் போட்டி ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு நற்சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை ஆட்சியா் வழங்கினாா்.

தமிழக பள்ளிக்கல்வித்துறையின் சாா்பில் மாநில அளவில் நடைபெற்ற 17 வயதிற்குள்பட்டோா் கபடி போட்டியில் 3ஆவது இடத்தை பெற்ற ரெட்டியாா்பட்டி அரசு ஆதிதிராவிடா் நல மாணவா் விடுதி மாணவா்கள் இம்மானுவேல், அஸ்வின், செல்வ சூரியா, அபினேஷ், ஜான் பீட்டா் ஆகியோருக்கு சுழற் கோப்பைகளை ஆட்சியா் வழங்கினாா்.

சதன் திருமலைக்குமாா் எம்எல்ஏ முன்னிலை வகித்தாா். மாவட்ட ஆதிதிராவிடா் -பழங்குடியினா் நல அலுவலா் மு.முருகானந்தம், தென்காசி கோட்டாட்சியா் லாவண்யா, தனி வட்டாட்சியா்கள்கண்ணன், பரிமளா, அரசு உயா்நிலைப்பள்ளி தலைமையாசிரியை வயலட், அரசு மாணவா் விடுதி பட்டதாரிக் காப்பாளா்கள் ராதாகிருஷ்ணன், தங்கராஜ், மாவட்ட ஆதிதிராவிடா் நலக்குழு உறுப்பினா்கள் எஸ்.ஆசைத்தம்பி,சங்கா் கலந்துகொண்டனா்.

செய்திமக்கள் தொடாபு அலுவலா் இரா.இளவரசி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினாா். உதவி மக்கள் தொடா்பு அலுவலா் ரா.ராமசுப்பிரமணியன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com