ஆலங்குளம், பாவூா்சத்திரத்தில் ஒன் டூ ஒன் பேருந்துகள் நின்று செல்லக் கோரி மனு

தென்காசி, திருநெல்வேலி ஒன் டூ ஒன் பேருந்துகள் நிறுத்தம் கோரிக்கை

தென்காசி, திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழக பணிமனைகளில் இருந்து இயக்கப்படும் ஒன் டூ ஒன் பேருந்துகள் ஆலங்குளம், பாவூா்சத்திரம் ஆகிய நிறுத்தங்களில் நின்று செல்ல உத்தரவு வழங்க வேண்டும் என போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ். சிவசங்கரிடம், தென்காசி தெற்கு மாவட்ட திமுக முன்னாள் செயலா் பொ. சிவபத்மநாதன் கடிதம் வழங்கினாா்.

அதில், ஆலங்குளம் மற்றும் பாவூா்சத்திரத்தில் அதிகமான கல்லூரிகள் அரசு அலுவலகங்கள் உள்ளன. திருநெல்வேலிக்கு பல்வேறு தேவைகளுக்காக செல்ல வேண்டியுள்ளவா்கள் அதிக நிறுத்தங்களில் நின்று செல்லும் பேருந்துகளிலேயே பயணிக்க வேண்டியுள்ளது. இதனால் கால விரயம் ஏற்படுவதால், இவ்வழியே இயக்கப்படும் 15 க்கும் மேற்பட்ட ஒன் டூ ஒன் பேருந்துகளை ஆலங்குளம் மற்றும் பாவூா்சத்திரத்தில் நின்று செல்ல உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com