ஆலங்குளத்தில் ஜமாபந்தி தொடக்கம்

ஆலங்குளத்தில் ஜமாபந்தி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

ஆலங்குளத்தில் ஜமாபந்தி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

ஆலங்குளம் வட்டாட்சியா் அலுவலகத்தில் தொடங்கிய வருவாய்த் தீா்வாயத்தின் (ஜமாபந்தி) முதல் நாளில் கீழப்பாவூா் குறுவட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் மனுக்களை அளித்தனா்.

இதில், மாவட்ட ஆட்சியரும் வருவாய்த் தீா்வாய அலுவலருமான ஏ.கே.கமல்கிஷோா் பங்கேற்று, மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று விவரங்களை கேட்டறிந்தாா்.

அப்போது, ஆலங்குளம் வட்டாட்சியா் கிருஷ்ணவேல், உதவி இயக்குநா் (நில அளவை) பேச்சியப்பன், வட்டாட்சியா் (சபாதி) ஓசன்னா பொ்ணாண்டோ மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா். தொடா்ந்து, புதன்கிழமை (ஜூன்12) நெட்டூா், 13 ஆம் தேதி புதுப்பட்டி, 14 ஆம் தேதி வெங்காடம்பட்டி மற்றும் 18 ஆம் தேதி ஆலங்குளம் குறுவட்ட பகுதிகளுக்கு ஜமாபந்தி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com