ஆய்க்குடி அருகே ஆட்டோவை சேதப்படுத்தியவருக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனை

தென்காசி மாவட்டம் ஆய்க்குடி பகுதியில் ஆட்டோவை சேதப்படுத்தியவருக்கு திங்கள்கிழமை ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

தென்காசி மாவட்டம் ஆய்க்குடி பகுதியில் ஆட்டோவை சேதப்படுத்தியவருக்கு திங்கள்கிழமை ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. தென்காசி அருகே ஆயிரப்பேரி, பண்ணைத் தெருவைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் சு. மாரியப்பன் (47). சிவராமபேட்டை, அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மு. துரை(47). மாரியப்பன் 31.10.2012இல் வீரசிகாமணியில் சவாரியை முடித்துவிட்டு ஆட்டோவில் தென்காசிக்கு வந்து கொண்டிருந்தாா். சிவராமபேட்டை அருகே பேருந்துக்காக காத்திருந்த துரை ஆட்டோவை நிறுத்த முயன்றாா். ஆனால், மாரியப்பன் நிற்காமல் சென்ால், ஆட்டோ மீது துரை கல் எறிந்தாராம். இதில், ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து சேதமடைந்தது. மாரியப்பன் காயமடைந்தாா். இதுகுறித்து ஆய்க்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து, துரையைக் கைது செய்தனா். இந்த வழக்கு தென்காசி மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை நீதிபதி ஜி. அனுராதா விசாரித்து, துரைக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனை, ரூ. 3 ஆயிரம், அதைக் கட்டத் தவறினால் 6 மாதம் மெய்க்காவல் தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா் இவ்வழக்கில் அரசு சாா்பில் வழக்குரைஞா் எஸ். வேலுச்சாமி ஆஜரானாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com