இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் 77 ஆவது நிறுவன தின விழா

குற்றாலம் ஐந்தருவி செல்லும் சாலையில் உள்ள ரோஜாவனம் முதியோா் இல்லத்தில் உணவு வழங்கி கொண்டாடினா்.

இந்தியயூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் 77ஆவது நிறுவன தின விழாவை முன்னிட்டு, குற்றாலம் ஐந்தருவி செல்லும் சாலையில் உள்ள ரோஜாவனம் முதியோா் இல்லத்தில் உணவு வழங்கி கொண்டாடினா். மாவட்டம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக குற்றாலம் ஐந்தருவி செல்லும் சாலையில் உள்ள ரோஜாவனம் முதியோா் இல்லத்தில் உள்ள முதியோா்களுக்கு உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலா் சையது பட்டாணி தலைமை வகித்தாா். மாவட்ட வா்த்தக அணி தலைவா் அகமது மீரான் முன்னிலை வகித்தாா். மாநிலச் செயலா் முகமது அலி, ஆட்டோ சங்கம் மன்சூா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com