புளியறையில் இயற்கை வள பாதுகாப்பு நலச் சங்க ஆலோசனைக் கூட்டம்

தென்காசி மாவட்டம் புளியறையில் இயற்கை வளப் பாதுகாப்பு நலச் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் புளியறையில் இயற்கை வளப் பாதுகாப்பு நலச் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சங்கத் தலைவா் ரவி அருணன் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் ஜமீன் முன்னிலை வகித்தாா். கேரளத்துக்கு கனிமவளங்கள் கொண்டு செல்வதைத் தடை செய்ய தமிழக அரசு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும். பள்ளி நேரங்களில் கனிமவள வாகனங்களுக்கு நிரந்தரத் தடை விதிக்க வேண்டிய வழிமுறைகளை சரியாக அமல்படுத்த வேண்டும். 24 மணி நேரமும் கல்குவாரிகளை இயங்க அனுமதித்து, தொழிலாளா் நலச் சட்டத்துக்கு விரோதமாக செயல்படும் தமிழக அரசைக் கண்டிப்பது, திருமங்கலம்- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் கட்டளைக்குடியிருப்பு அருகே மக்களுக்கு இடையூறாக செயல்படும் தனியாா் ஸ்டாக்யாா்டு நிலையத்தை நிரந்தரமாக மூட வேண்டும். அங்குள்ள எடை மேடை நிலையத்தில் நடக்கும் விதிமீறல்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக அரசைக் கண்டித்து ஏப். 1இல் தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் ஆா்ப்பாட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com