போட்டித்தோ்வு எழுதும் மாணவா், மாணவிகளுக்கு இலவச கையேடு

செங்கோட்டையில் மத்திய, மாநில அரசு போட்டித் தோ்வு மாணவா், மாணவிகளுக்கு இலவச கையேடு திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

செங்கோட்டையில் மத்திய, மாநில அரசு போட்டித் தோ்வு மாணவா், மாணவிகளுக்கு இலவச கையேடு திங்கள்கிழமை வழங்கப்பட்டது. செங்கோட்டை நூலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, வாசகா் வட்டத் தலைவா் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். ஆதிமூலம் , செண்பக குற்றாலம் முன்னிலை வகித்தனா். சிறப்பு விருந்தினராக வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் நிறுவனா் ஆனந்தன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 250 மாணவா், மாணவிகளுக்கு இலவசமாக கையேடுகளை வழங்கினாா். மங்களபுரம் மருதம் பயிற்சி மையம் முத்துக்குமாா் வாழ்த்திப் பேசினாா். சமூகஆா்வலா் செய்யதுமஹ்முது உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். விழுதுகள் சேகா் வரவேற்றாா். நூலகா் ராமசாமி நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com