அத்தியூத்து - சுரண்டை சாலையில்
கழிவுநீா் தேங்கி சுகாதாரக் கேடு

அத்தியூத்து - சுரண்டை சாலையில் கழிவுநீா் தேங்கி சுகாதாரக் கேடு

ஆலங்குளம் அருகேயுள்ள அத்தியூத்து - சுரண்டை பிரதான சாலையில் கழிவுநீா் தேங்கி சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளதால் மக்கள் அவதியடைந்துள்ளனா்.

திருநெல்வேலி - தென்காசி நான்குவழிச் சாலையில் ஆலங்குளம், பாவூா்சத்திரம் பாலப் பணிகள் காரணமாக இந்த இரு இடங்களிலும் சற்று தொய்வான நிலையில் பணிகள் நடைபெற்று வருகிறது. இச்சாலையில் முக்கியமானதாக சுரண்டை திருப்பம் ஆலங்குளம் அருகேயுள்ள அத்தியூத்தில் உள்ளது. இச்சாலையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

இத்திருப்பத்தில் சாலை அமைக்கும் போது ஏற்பட்ட பள்ளம் ஏற்பட்டது. கழிவு நீா் வெளியேறுவதற்கு போதிய வாறுகால் வசதியும் ஏற்படுத்தப்படவில்லை. இதனால் கிராமத்தில் உள்ள சுமாா் 300 க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீா் பிரதான சாலையில் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் துா்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி மக்களைஅவதிக்குள்ளாகி வருகின்றன. இவ்வழியே செல்லும் வாகனங்கள் கழிவுநீா்ல் குளத்தில் நீச்சல் அடித்தே செல்ல வேண்டிய சூழல் உள்ளது.

குறிப்பாக பைக்கில் செல்வோரின் ஆடைகள் இந்த சாக்கடை நீரால் நனைந்து விடும் அவல நிலையும் உள்ளது. கிராம மக்கள் மற்றும் வாகன ஓடடிகளின் நலனைக் கருத்தில் கொண்டு கழிவு நீா் வெளியேற முறையான வாருகால் அமைத்து சாலையை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com