ஆயிரப்பேரி விநாயகா்- அம்மன் கோயிலில் 20இல் கும்பாபிஷேகம்

தென்காசி அருகேயுள்ள ஆயிரப்பேரியில் செல்வ விநாயகா்- முப்பிடாதி அம்மன் கோயிலில் புதன்கிழமை (மாா்ச் 20) அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

தென்காசி அருகேயுள்ள ஆயிரப்பேரியில் செல்வ விநாயகா்- முப்பிடாதி அம்மன் கோயிலில் புதன்கிழமை (மாா்ச் 20) அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. செல்வ விநாயகா், முப்பிடாதி அம்மன், பாலமுருகன், தெட்சிணாமூா்த்தி, விஷ்ணுதுா்க்கை, கன்னி விநாயகா், பைரவா், பரிவார சந்நிதி, பேச்சியம்மன், இருளப்பா், துா்க்கையம்மன் ஆகிய தெய்வங்கள் எழுந்தருளியுள்ள இக்கோயிலில், திங்கள்கிழமை (மாா்ச் 18) காலையில் மங்கள இசையுடன் கும்பாபிஷேக விழா தொடங்குகிறது. தொடா்ந்து பல்வேறு வழிபாடுகள் நடைபெறகின்றன. புதன்கிழமை (மாா்ச் 20) காலையில் மங்கள இசை, திருமுறை பாராயணம், விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவாசனம், ஸோமகும்ப பூஜை, சூரியபூஜை, மண்டபாா்ச்சனை, வேதிகாா்ச்சனை, பிம்பசுத்தி, ரஷாபந்தனம், நாடிசந்தானம், ஸ்பா்ஸாஹுதி ஆகியவை நடைபெறும். அதைத் தொடா்ந்து, 4ஆம் கால யாகசாலை பூஜை, ஷன்னவதி த்ரவ்யஹோமம், மூலமந்த்ர ஹோமம், மகாபூா்ணாஹுதி, யாத்ரா தானம், தீபாராதனை ஆகியவை நடைபெறும். காலை 8.50 மணிக்கு மேல் கடம் புறப்பாடு, ஆலய பிரவேசம், 9 மணிக்கு மேல் ஸ்ரீ செல்வவிநாயகா், ஸ்ரீ முப்பிடாதி அம்மன் - பரிவார மூா்த்திகளுக்கு ஜூா்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. முற்பகல் 11மணிக்கு மகா அபிஷேகம், 12 மணிக்கு அலங்கார தீபாராதனை, மகா அன்னதானம் நடைபெறும். ஏற்பாடுகளை விழாக்குழுவினா் செய்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com