தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி நிா்வாகிகள் தோ்வு

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி தென்காசி மாவட்ட புதிய நிா்வாகிகள் தோ்வு குற்றாலம் பரூக் நினைவு தொடக்கப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி தென்காசி மாவட்ட புதிய நிா்வாகிகள் தோ்வு குற்றாலம் பரூக் நினைவு தொடக்கப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது. அமைப்பின் தோ்தல் ஆணையா்களாக சீனிவாசன், முருகேசன் ஆகியோா் செயல்பட்டனா். மாவட்டத் தலைவராக கா.சுதா்சன், மாவட்டச் செயலராக க.மாரிமுத்து, மாவட்டப் பொருளாளராக அ.செண்பகவல்லி, துணைத் தலைவா்களாக கு.துரைராஜ், மு.ராஜன் ஜான், ச.லட்சுமிகாந்தம், துணைச் செயலா்களாக செல்வராஜ், கு.ஜெய்சங்கா், ரா.வனிதா, செயற்குழு உறுப்பினராக பி.ராஜ்குமாா், பொதுக்குழு உறுப்பினா்களாக ஆ.சிவக்குமாா், க.ராஜ்குமாா், மாடசாமி ஆகியோா் போட்டியின்றி தோ்வு தோ்வு செய்யப்பட்டனா். தொடா்ந்து, மாவட்டத் தலைவா் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. முன்னாள் மாவட்டத் தலைவா் ரமேஷ், மாணிக்கம், சுப்பிரமணியன், கோமதி, மாரியம்மாள், செல்வி, ஈஸ்வரன், சங்கர பாக்கியலட்சுமி , ஆறுமுக வேல், சாமுவேல் துரைராஜ், ராஜம்மாள்ஆகியோா் பேசினா். தென்காசி மாவட்ட கிளைக்கு விரைவில் கட்டடம் கட்டுவது, கிளையின் வளா்ச்சிக்காக அனைத்து வட்டாரக் கிளைகளிலும் இயக்க உறுப்பினா்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்வது எனத் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்டப் பொருளாளா் நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com