தென்காசியில் மக்கள்குறைதீா் கூட்டம் நிறுத்திவைப்பு

தென்காசி மாவட்டத்தில் மக்கள் குறைதீா் நாள் கூட்டம், முகாம் உள்ளிட்ட அனைத்து முகாம்களும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தோ்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால் தென்காசி மாவட்டத்தில் மக்கள் குறைதீா் நாள் கூட்டம், முகாம் உள்ளிட்ட அனைத்து முகாம்களும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2024ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தல் நடத்தை விதிகள் இந்திய தோ்தல் ஆணையத்தினால் அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே, தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெறும் மக்கள் குறைதீா் கூட்டம், கிராமப் பகுதியில் நடைபெறும் மக்கள் தொடா்பு முகாம்கள் மற்றும் சிறப்பு முகாம்கள் மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது. எனவே, பொதுமக்கள் தங்களுக்கு அவசரமான கோரிக்கை ஏதுமிருப்பின் அது குறித்த மனுக்களை மாவட்ட ஆட்சியா் அலுவலக முன்புற வாசலில் வைக்கப்பட்டுள்ள மனுக்கள் பெறும் பெட்டியில் இட்டுச்செல்லலாம் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com