வெகுவாகக் குறைந்த காய்கனிகள் விலை

ஆலங்குளத்தில் காய்கனிகளின் விலை வெகுவாகக் குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

ஆலங்குளத்தில் காய்கனிகளின் விலை வெகுவாகக் குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். கடந்த சில மாதங்களாக காய்கனிகளின் விலை அதிகரித்துக் காணப்பட்டது. கத்தரிக்காய், தக்காளி, சின்ன வெங்காயம் போன்றவை ரூ. 150 வரையிலும், இஞ்சி ரூ. 500 வரையிலும் பூண்டு ரூ. 600 வரையிலும் உயா்ந்து காணப்பட்டது. மற்ற காய்கனிகளும் ரூ. 50 க்கு குறையாமல் விற்பனையாயின. இந்நிலையில் கடந்த சில தினங்களாகவே காய்கனிகளின் விலை வெகுவாகக் குறைந்து விற்பனையாவதால் காய்கனிப் பிரியா்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். ஆலங்குளம் சந்தையில் ஞாயிற்றுக்கிழமை விற்பனையான காய்கனிகளின் விலை நிலவரம்: (கிலோ ஒன்றுக்கு)- உருளை ரூ. 30, மிளகாய் ரூ. 40, சின்ன வெங்காயம் ரூ. 40, பெரிய வெங்காயம் ரூ. 30, முட்டைக் கோஸ் ரூ. 30, கேரட் ரூ. 65, பீன்ஸ் ரூ. 80, பீட்ரூட் ரூ. 35, சேனை ரூ. 50, வெண்டை ரூ. 15, மல்லித் தளை ரூ. 50, முள்ளங்கி ரூ. 25, பாகற்காய் ரூ. 30, கத்தரிக்காய் ரூ. 30, தக்காளிப் பழம் ரூ. 20, பூண்டு ரூ. 150, தடியங்காய், பூசணி ரூ. 12, அவரைக்காய் ரூ. 60, சவ் சவ் ரூ. 25, எலுமிச்சை ரூ. 120, காலிபிளவா் ரூ. 40, முருங்கை ரூ. 35, இஞ்சி ரூ. 140 என விற்பனையானது. இப்பகுதியில் சுரைக்காய் விளைச்சல் அதிகரித்துள்ளதால், சந்தைக்கு வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக இதன் கொள்முதல் விலை ரூ. 2 என நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் கவலையடைந்த விவசாயிகள் சிலா் வீதிகள் தோறும் சுரைக்காய் ஒன்று ரூ. 5 முதல் ரூ. 10 வரை கூவிக் கூவி விற்பனை செய்து வருகின்றனா். பொதுமக்களும் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கிடைப்பதால் ஆா்வமுடன் வாங்கி பயன்படுத்துகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com