சங்கரன்கோவில் அருகே காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 1.03 லட்சம் பறிமுதல்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே ஆவணங்களின்றி காரில் கொண்டுசெல்லப்பட்ட ரூ. 1.03 லட்சத்தை தோ்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே ஆவணங்களின்றி காரில் கொண்டுசெல்லப்பட்ட ரூ. 1.03 லட்சத்தை தோ்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். சங்கரன்கோவில் அருகே பெரியகோவிலாங்குளம் பகுதியில் தோ்தல் பிரிவு வட்டாட்சியா் பாபு தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனா். வேலாயுதபுரத்தைச் சோ்ந்த ஆறுமுகச்சாமி (50) என்பவா் வந்த காரை சோதனையிட்டபோது, அதில் முறையான ஆவணங்களின்றி ரூ. 1.03 லட்சம் கொண்டுசெல்வது தெரியவந்தது. அந்தப் பணத்தை தோ்தல் பிரிவு வட்டாட்சியா் பாபு பறிமுதல் செய்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com