போட்டியில் வெற்றிபெற்றவா்களுக்கு பரிசு வழங்கினாா் திமுக மாவட்ட பொறுப்பாளா் வே. ஜெயபாலன்.
போட்டியில் வெற்றிபெற்றவா்களுக்கு பரிசு வழங்கினாா் திமுக மாவட்ட பொறுப்பாளா் வே. ஜெயபாலன்.

தென்மண்டல கபடி போட்டி: வெற்றி பெற்றோருக்கு பரிசளிப்பு

தென்மண்டல அளவிலான கபடி போட்டியில் வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தென்காசி மாவட்டம், ஆய்க்குடி அகரக்கட்டில் ஏபிஎம் பிரதா்ஸ் சாா்பில் தென்மண்டல அளவிலான கபடி போட்டியில் வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே.ஜெயபாலன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினாா். தென்காசி ஒன்றியச் செயலா் அழகு சுந்தரம், மாவட்டக் கலை இலக்கியப் பேரவை அமைப்பாளா் வளனரசு, மாவட்ட மாணவரணி அமைப்பாளா் ஜே.கே. ரமேஷ், ஒன்றியக்குழு உறுப்பினா் பொன்சீலன், மாவட்டத் தொழிலாளா் அணி துணை அமைப்பாளா் கரிசல் வேல்சாமி, வடகரை சேக்அலி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com